உமர் காலித்துக்கு ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக 2020 பிப்ரவரியில் தில்லியில் போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்தை சீர் குலைக்கும் நோக்கத்தில் இந்துத் துவா குண்டர்கள் வன்முறையை தூண்ட, வடக்கு தில்லியில் கலவரம் வெடித்தது. இந்த வன்முறையில் 50க்கும் மேற் பட்டோர் உயிரிழந்தனர். 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக இந்துத்துவா குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக் காமல், தில்லி ஜவஹர்லால் நேரு பல் கலைக்கழக (JNU) முன்னாள் ஆராய்ச்சி மாணவர் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் உள்ளிட்ட 9 பேர் 2020ஆம் ஆண்டு செப்., மாதம் சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டனர். 9 பேரும் 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை யில் உள்ளனர். இந்நிலையில், உமர் காலித் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்கள் திங்க ளன்று உச்சநீதிமன்றத்தில் விசார ணைக்கு வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
