tamilnadu

குறுக்குப்பறையூரில் போராடிய விவசாயிகள் கைது

குறுக்குப்பறையூரில் போராடிய விவசாயிகள் கைது

தவிச கண்டனம்

தவிச கண்டனம் சேலம், அக்.26- சேலம், குறுக்குப்பறையூரில் குப் பைக்கிடங்கு அமைக்கப்படுவதை கண்டித்து, 132 ஆவது நாளாக விவசா யிகள் போராடி வருகிற நிலையில், சனியன்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்த னர். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட குறுக்குப்பாறையூரில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திற்காக இந்த இடத்தை தேர்வு செய்த நாள் முதலே இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்க ளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 162 ஆவது நாளாக விவ சாயிகள் போராடி வருகின்றனர். பாதிப்பற்ற மாற்று இடமாக, பேரூ ராட்சியில் உள்ள 19 அரசு புறம்போக்கு நிலங்களில் இத்திட்டத்தை செயல் படுத்த வலியுறுத்தி, உள்ளாட்சித் துறை அமைச்சர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அதிகாரிகளை சந்தித்து வலியு றுத்தினர். நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.  எதிர்ப்புகள் மற்றும் நீண்டநாள் போராட்டத்தையும் மீறி, சனியன்று குப் பைகளுடன் திடக்கழிவு மேலாண்மை திட்டத் திறப்பு விழாவுக்கு பேரூராட்சி தலைவர் தலைமையில் அதிகாரிகள் வந்தனர். சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப் பட்டனர். விவசாயிகள் சங்க மாவட்ட செயலா ளர் ஏ.ராமமூர்த்தி, வட்டத் தலைவர் ஆர்.ராஜந்திரன் ஆகியோர் அதிகா ரிகளிடம் விவசாயிகளின் நியாயங் களை எடுத்துரைத்து, மாற்று இடத்தில் இத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு வற்புறுத்தினர். ஆனால், கோரிக்கை களை காதில் கொள்ளாமல் காவலர் கள் விவசாயிகளை கைது செய்தனர். விவசாயிகள் விரோதச் செயலை யும், கைது நடவடிக்கையையும் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மாற்று இடத்தில் இத்திட்டத்தை உடனடியாக செயல்ப டுத்த வேண்டும் என்றும் சங்ககிரி வட்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.