tamilnadu

img

பழங்குடியின கிராமத்தில் தெருவிளக்கு அமைப்பு

பழங்குடியின கிராமத்தில் தெருவிளக்கு அமைப்பு

உதகை, அக்.26- தனியார் அறக்கட்டளை சார்பில், கூடலூர் அருகே உள்ள பழங்குடியின கிராமத்தில் தெருவிளக்கு அமைக்கப்பட்டது. சஸ்டிடெய்னபல் டெவலப்மென்ட் கவுன் சில் (Sustainable Development Council) மற்றும் சீராக்கு சமூக நல அறக்கட்டளை இணைந்து, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் (சிஎஸ்ஆர்) நிதியினை கொண்டு, பழங் குடியினர் சமூகத்தின் நலனுக்காக நிலைத் தன்மையுள்ள தெருவிளக்கு அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த  முயற்சியின் கீழ், நீலகிரி மாவட்டம், நெல்லி யாளம் நகராட்சிக்குட்பட்ட மூச்சுக்குண்ணு என்ற பழங்குடி கிராமத்தில் 10 சூரிய ஆற்றல் தெருவிளக்குகள் நிறுவப்பட்டன. இத்திட் டம், மக்கள் வனவிலங்கு தாக்குதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.