நொய்யல் ஆற்றில் நடந்து சென்ற ஒற்றை கொம்பன் யானை
கோவை, அக்.26- நொய்யல் ஆற்றில் ஒற்றை கொம்பன் யானை வெகுசாதாரண மாக நடந்து சென்ற வீடியோ காட்சி கள் வைரலாகி வருகிறது. கோவை சாடிவயல் மற்றும் ஆலந்துறை வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அவ்வப்போது விவ சாய நிலங்களுக்குள் நுழைந்து சேதப்படுத்தி வருகிறது. இந்நி லையில், சனியன்று இரவு சாடி வயல் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் கொம்பு காட்டு யானை ஒன்று, ஆலந்துறை பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. விடிய விடிய அங்கேயே முகாமிட்டிருந்த யானை, ஞாயிறன்று காலை மீண்டும் வனப்பகுதியை நோக்கிச் சென்றது. அப்போது, இருட்டுப்பள் ளம் அருகே ஓடும் நொய்யல் ஆற்றில் இறங்கி நின்றது. அதைக் கண்ட அவ்வழியாக சென்ற பொதுமக்கள், யானையை வனப் பகுதிக்குள் செல்லுமாறு அன்போடு கூச்சலிட்டனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேக மாகப் பரவி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.