இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
திருப்பூர், அக்.26- தாராபுரம் அருகே ஞாயிறன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த பெரமியம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் ரத்தினம் மாள் (30). இவருக்கும் வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் ஞாயிறன்று திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், ரத்தினம்மாளின் பெற்றோர் வெளியூர் சென்று விட்டு, வெள்ளியன்று இரவு வீட்டுக்கு வந்தபோது, ரத்தி னம்மாள் தூக்கிட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரத்தி னம்மாள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மூலனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திரு மணம் நடைபெற இருந்த நிலையில், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
500 கிலோ குட்கா பறிமுதல்
சேலம், அக்.26- அயோத்தியப்பட்டணம் அருகே காரில் கடத்தப்பட்ட 500 கிலோ குட்காவை போலீசார் சனியன்று பறிமுதல் செய்த னர். சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த சுக்கம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அரூர் - தருமபுரி சாலையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அம் பேத்கர் தலைமையிலான போலீசார் சனியன்று அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனையிட முயன்றனர். இதையறிந்த காரில் இருந்தவர்கள், காரை நிறுத்தாமல் சென்றனர். அப்போது, சுக்கம்பட்டி வாத்தியார்காடு என்ற இடத்தில் கார் டயர் பஞ்சரானது. இதனால் காரை நிறுத்தி விட்டு காரிலிருந்தவர்கள் தப்பியோடினர். காரை போலீசார் சோதனை செய்ததில், 500 கிலோ குட்கா பொருட்கள் இருப் பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த வீராணம் போலீசார், வழக்குப்பதிவு செய்து காரின் பதிவெண்ணை கொண்டு விசாரித்து வருகின்றனர்.
சிறந்த ரத்ததான முகாம் அமைப்பாளர் விருது
நாமக்கல், அக்.26– ராசிபுரம் வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் பாலி டெக்னிக் இன்ஸ்டிடியூஷனுக்கு சிறந்த ரத்ததானம் முகாம் அமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. “உலக ரத்ததான கொடையாளர் தினம் 2025” - நிகழ்ச்சியானது நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், 2024ஆம் ஆண்டில் அரசு ரத்த வங்கிகளுக்கு தன்னார்வ ரத்ததான முகாம்களை சிறப்பாக நடத்திக் கொடுத்து, தேவைப்படும் நோயாளிகளுக்கு ரத்தமளித்தற்கான “சிறந்த தன்னார்வ ரத்ததான முகாம் அமைப்பாளர் 2024” என்ற கேடயத்தை, மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வழங்க, முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூஷனின் இளைஞர் செஞ்சிலுவை மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.பிரபு பெற்றுக் கொண்டார்.
‘டிஜிட்டல் கைது’ மோசடி: கோவையில் மூவர் கைது
கோவை, அக்.26- கோவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு தலைமை பொறியாளர் ஒருவரிடம் ‘டிஜிட்டல் கைது’ எனக் கூறி ரூ.29.88 லட்சம் மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்த மூன்று பேரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி, ஓய்வு பெற்ற அரசு தலைமை பொறியாளரை வாட்ஸ்அப் கால் மூலம் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள், தங்களை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டனர். அவ ரது ஆதார் எண் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சிக்கியிருப்பதாகவும், விசாரணைக்காக ‘டிஜிட்டல் கைது’ செய்வதாகவும் கூறி மிரட்டியுள்ளனர். மேலும், போன் இணைப்பைத் துண்டிக்க விடாமல் தொடர்ந்து பேசிய அவர்கள், “விசாரணைக்காக உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் அனுப்ப வேண்டும், விசாரணை முடிந்த தும் பணம் மீண்டும் வந்துவிடும்” என்று கூறியுள்ளனர். இதை நம்பிய அதிகாரி, RTGS மூலம் ரூ.29.88 லட்சத்தை மோசடி கும்பலின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். பணம் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் இணைப் பைத் துண்டித்துவிட்டு, செல்போனை அணைத்துவிட்டனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அதிகாரி, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், மோசடிக்கு பயன் படுத்தப்பட்ட வாட்ஸ்அப் எண் மற்றும் இணையதள இணைப்பை வைத்து நடத்திய தீவிர விசாரணையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த நபீல் (30), ஹரிஷ் (34), முகமது ரமீஸ் (28) ஆகிய மூவரையும் கைது செய்தனர். கைது செய் யப்பட்ட மூவரையும் கோவை அழைத்து வந்து விசாரித்த பின்னர், நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறு விளையாட்டரங்கம் அமைக்கும் பணி
அமைச்சர் அடிக்கல் ஈரோடு, அக்.26- சிவகிரியில் முதலமைச்சரின் சிறு விளை யாட்டரங்கம் அமைக்கும் பணிக்கு அமைச்சர் சு.முத்துசாமி ஞாயிறன்று அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட சிவகிரி வாரச் சந்தை அருகே முதலமைச்சரின் சிறு விளை யாட்டரங்கம் அமைக்கும் பணிக்கு ஞாயி றன்று அடிக்கல் நாட்டும் விழா நடைபெற் றது. வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத் தார். இதன்பின் அவர் பேசுகையில், ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள இந்த விளையாட்டரங்கில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து, கபாடி மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள விளையாட்டுகள் உட்பட குறைந்தபட்சம் ஐந்து முக்கிய விளை யாட்டுக்களுக்கான வசதிகள் உள்ளது. இதன் மூலம் மாணவ, மாணவியர்கள் விளையாட் டுத்துறையில் மேலும் சிறந்து விளங்குவ தற்கு வாய்ப்பாக அமையும். விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கிராமப் புறங்களில் உள்ள திறமையான இளைஞர் களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதாகவும் அமை யும் என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சி யர் ச.கந்தசாமி, ஈரோடு நாடாளுமன்ற உறுப் பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பி னர்கள் வி.சி.சந்திரகுமார், சி.சரஸ்வதி, பேரூ ராட்சித் தலைவர் பிரதீபா கோபிநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.