tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

நகர்மன்றத் தலைவரின் வார்டில் அடிப்படை வசதிகள் இல்லை!

உதகை, அக்.26- நெல்லியாளம் நகர்மன்றத் தலைவரின் வார்டில் சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதி களும் ஏற்படுத்தி தரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர், நெல்லியாளம் நகராட்சி, 3  ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியான குன்றிகடவு பகுதியில் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரு கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள் ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக நகராட்சி நிர்வா கத்திற்கும், இப்பகுதியின் வார்டு கவுன்சிலரும், நகர்மன்றத் தலைவருமான சிவகாமிக்கு பலமுறை தெரிவித்தும் எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள்  தெரிவித்துள்ளனர். மேலும், நடைபாதை வசதி இல்லாததால் மருத்துவ அவசர தேவைகளுக்கு, உடல் நலம் பாதிக்கப்பட்ட வர்கள் மற்றும் முதியவர்களை தொட்டில் கட்டி தூக்கிச் செல்லக்கூடிய அவல நிலை இருந்து வருகிறது. தெரு  விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் அச்சுறுத்தல்களுக்கிடையே குடியிருப்புகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இங்கு ஆய்வு மேற்கொண்டு உடனடியாக அடிப்படை வச திகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னிமலை முருகன் கோவிலுக்கு 4 சக்கர வாகனத்தில் செல்லத் தடை

ஈரோடு, அக்.26- சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மலை  மீது நான்கு சக்கர வாகனங்கள் செல்ல இன்று மற்றும் நாளை  தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள சுப்பிரமணிய  சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின், முக்கிய நிகழ்வான  சூரசம்ஹாரம் திங்களன்று (இன்று) நடைபெறவுள்ளது. இதையொட்டி, கோயிலின் மலைப் பாதையில் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நான்கு சக்கர வாக னங்கள் செல்ல அக்.27, 28 (இன்று மற்றும் நாளை) ஆகிய தேதி களில் அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில்  அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பக்தர்கள், தங்களது இருசக்கர வாகனங்கள் மற்றும் கோவில் பேருந்து மூலம்  மலைக்கோவிலுக்கு செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது.