tamilnadu

img

தமுஎகச மாநாட்டில் படைப்பாளர்களுக்கு கௌரவம்

தமுஎகச மாநாட்டில் படைப்பாளர்களுக்கு கௌரவம்

கோவை, அக்.26- தமுஎகச கோவை மாவட்ட மாநாட்டில், படைப்புகளை வெளி யிட்ட படைப்பாளர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட 16 ஆவது மாநாடு, சிங்காநல்லூர், வரதராஜ புரம் சர்க்கரையார் திருமண மண்ட பத்தில் சனியன்று துவங்கியது. முன் னதாக எழுத்தாளர்கள் மேளம்,  தாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இதன் பின் அரங்க வளாகத்தில் படைப் பாளர்களின் கவிதை, எழுத்து, கலை கண்காட்சியை எழுத்தாளர் இரா.வெங்கடேசன் திறந்து வைத் தார். இம்மாநாட்டிற்கு மாநில  செயற்குழு உறுப்பினர் மீ.உமா  மகேஸ்வரி தலைமை வகித்தார். டி. சுரேஷ்குமார் வரவேற்றார். எழுத் தாளர் சு.வேணுகோபால் வாழ்த் திப் பேசினார். மாநில பொதுச்செய லாளர் ஆதவன் தீட்சண்யா சிறப்பு ரையாற்றினார். இம்மாநாட்டில்  கடந்த 4 ஆண்டுகளில் படைப்பு களை வெளியிட்ட 120 படைப்பா ளர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. முன்னதாக, மாநாட்டில் தமுஎகச வைச் சேர்ந்த கவிஞர் நா.முத்து வின் தலைக்குள் புழு வளர்ப்பவன் என்கிற கவிதை தொகுப்பினை ஆத வன் தீட்சன்யா வெளியிட, இதனை, நா.முத்துவின் குடும்பத்தார் பெற்றுக் கொண்டனர்.  இதனிடையே, செய்தியாளர்க ளிடம் ஆதவன் தீட்சண்யா பேசுகை யில், தமுஎகச 16 ஆவது மாநில மாநாடு வரும் டிச.5,6,7 ஆகிய தேதி களில் தஞ்சாவூரில் நடைபெற உள்ளது. “வெறுப்பின் கொற்றம் வீழ்க, அன்பே அறமென எழுக” என்ற முழக்கத்தில் மாவட்ட மாநா டுகள் நடைபெற்று வருகிறது. நாடு  முழுவதும் வெறுப்பு அரசியலை பயன்படுத்தி அரசியல் அதிகா ரத்தை கைப்பற்ற முடியும் என்ற பிளவுவாத சக்திகள் தீவிரமாக வேலை செய்து வரும் நேரத்தில், மக்கள் ஒன்றுமையையும், மத நல் லிணக்கத்தை வலியுறுத்தியும் மாநாடு நடைபெற்று வருகிறது, என்றார்.