tamilnadu

img

இயற்கையை அழித்து எழுப்பப்படும் கட்டிடங்கள்!

இயற்கையை அழித்து எழுப்பப்படும் கட்டிடங்கள்!

நீலகிரி மாவட்டத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்க 1993 ஆம் ஆண்டு ‘நீல கிரிக்கான மாஸ்டர் பிளான்’ அறி விக்கப்பட்டது. மாநிலத்தின் முக்கிய திட்டங்களில் ஒன்றான, ‘மாஸ்டர் பிளான்’ சட்டத்தில், மலைப்பகுதிகளில் 7 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டி டம் கட்டக் கூடாது; 1,500 சதுரடி கட்டு மானப் பணிக்கு மட்டும் உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்பட்டது.  ஐந்து ஆண்டுகளுக்கு முன், இந்த  விதிமுறைகளில் அரசால் ஏற்படுத்தப் பட்ட தளர்வால், பிரமாண்ட கட்டுமானங் கள் அதிகரித்து, மலை மாவட்டம், தற் போது ‘கட்டிடக் காடாக’ மாறி வருகி றது. அதிலுள்ள ஒரு விதிமுறை தளர் வின்படி, 5 ஏக்கர் நிலப்பரப்பு வரையில் அமையும் மனை பிரிவுகளுக்கு, மாவட்ட ஆட்சியர் ஆய்வறிக்கை அடிப் படையில், கட்டிட கலை எழில் நோக்கு கமிட்டியின் ஒப்புதல் பெற்று, கோவை  மண்டல அலுவலகத்தில் அனுமதி பெற லாம். இந்த வரம்பிற்கு மேல் உள்ள நில  பயன் மாற்றத்துக்கு மட்டும், சென்னை யில் உள்ள மலையிட பாதுகாப்பு குழும மான ஹாகா ஒப்புதல் பெறவும் வேண் டும் என, அறிவுறுத்தப்பட்டது. இந்த தளர்வு, நீலகிரி மலைப்பகுதியில் சொகுசு பங்களாக்கள், சுற்றுலா விடுதி களை கட்டும் உள்ளூர் மற்றும் வெளி  மாநிலங்களில் பணம் படைத்தவர்க ளுக்கு வசதியாக அமைந்துவிட்டது. மேலும், மாநிலத்தில் மிகவும் பேரிடர் அபாய பகுதியாக அறிவிக்கப்பட்ட நீல கிரி மாவட்டத்துக்கு, இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி வரு வதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளை நிலங்கள் அழிப்பு மாவட்டத்தில் நகராட்சி, பேரூ ராட்சி, கிராம ஊராட்சி என உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் விளை நிலங் கள் வேகமாக அழிக்கப்பட்டு, கட்டி டங்களாக மாறி வருகிறது. கடந்த 10  ஆண்டுகளில் உள்ளாட்சி அமைப்புக ளில் அனுமதி பெற்றாலும், விளை நிலங்கள் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டக்கூடாது என விதிமுறைகள் உள் ளன. ஆனால், அந்த விதிகளை மீறி மாவட்டம் முழுவதும், 30 ஆயிரம் கட்டி டங்கள் விளை நிலங்களில் கட்டப்பட் டுள்ளது. 25 ஆயிரம் ஏக்கரில் மலை காய்கறிகள் பயிரிடப்படுவதாக தோட் டக்கலை தெரிவித்தாலும் 5 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு கட்டடங்களாக விளை  நிலங்கள் மாறியுள்ளது. இதுகுறித்து சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறுகை யில், நீலகிரியில் விளை நிலங்களை அழித்து உள்ளூர் மக்கள், வெளி மாநி லங்களை சேர்ந்த செல்வந்தர்கள், கட் டிட விதிகளை மீறி கட்டடங்களை கட்டி யுள்ளனர். நீலகிரிக்கான பேரிடர் அறி விப்பை கருத்தில் கொண்டு குறிப்பாக விளை நிலங்களை அழித்து கட்டிடங் களை கட்டுவதை கண்காணித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இயற்கை அழிப்பு நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்  தலங்களை காண உலகத்தில் பல் வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இவர்கள் நீலகிரிக்கு வரும்போது இயற்கையில் பலவித அழகை ரசிக்க வேண்டும் என் னும் கனவுகளுடன் ஆயிரக்கணக்கிலே செலவு செய்து வருகை புரிகின்றனர். இங்கு வந்து இறங்கியவுடன் தங்கள் கனவுகளை உடைத்து நொறுங்கும் காட்சிகளை கண்டு மனம் வெதும்பு கின்றனர். இயற்கை எழில் கொஞ்சும்  காட்சிகளுக்கு பதிலாக திரும்பிய இட மெல்லாம் கான்கிரீட் கட்டிடங்களாக மாறியுள்ளன. அரசு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டால் மட்டுமே உலக வரைபடத்தில் நீலகிரியை காப் பாற்ற முடியும் என சுற்றுலாப் பயணி கள் கூறுகின்றனர். -ஜே.ஷேக் அமீன்