பீகார் காங்கிரஸ் பொறுப்பாளர் அசோக் கெலாட்
பீகார் தேர்தலில் அமித் ஷாவின் வார்த்தை ஜாலங்கள் எல்லாம் இம்முறை எடுபடாது. பாஜ கூட்டணியின் தொடர்ச்சியான ஆட்சியால் இங்கு நிலைமை மோசமாக உள்ளது. வேலையில்லாமல் இளைஞர்கள் திண்டாடி வருகிறார்கள். அதனால் இந்த தேர்தலில் “இந்தியா” கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
தில்லி ஆம் ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ்
மக்களுக்கு மாசடைந்த யமுனை நீர். ஆனால் பிரதமர் மோடிக்கு சுத்திகரிக்கப்பட்ட யமுனை நீர். பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, சாத் பூஜையின் போது மோடி நீராடுவதற்காக, யமுனை நதிக்கு அருகில் சுத்தமான குடிநீரால் நிரப்பப்பட்ட ஒரு குளத்தை பாஜகவின் தில்லி அரசு கட்டியுள்ளது. அவர் குளித்தப் பின் மாசடைந்த யமுனை நீர் குளத்தில் சேரும்.
கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே
நான் வருமான வரி செலுத்துபவன். அதற்கான பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்கிறேன். ஆனால் ஆர்எஸ்எஸ் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள் யார்? எவ்வளவு நன்கொடை கிடைக்கிறது? எங்கிருந்து வருகிறது? யார் இதை அளிக்கிறார்கள்? இதனை ஆர்எஸ்எஸ் அறிவிக்கத் தயாரா?
சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் அம்பாதாஸ் தன்வே
மகாராஷ்டிரா மருத்துவர் தற்கொலை வழக்கில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., ரஞ்சித் சிங் நாயக் நிம்பல்கருக்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் உடற்கூராய்வு அறிக்கையில் தவறான தகவல் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ரஞ்சித் சிங்கை இணை குற்றவாளியாக சேர்க்க வேண்டும்.
