states

தீக்கதிர் விரைவு செய்திகள்

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட் டத்தின் அபய்பூர் பகுதியை சேர்ந்தவர் ரோஷன் குமார் பத்ரா (வயது 24). இவர் ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள நீட் தேர்வு பயிற்சி  மையம் ஒன்றில் சேர்ந்து, தேர்வுக்கு படித்து வந்துள்ளார். இதற்காக ராஜீவ் காந்தி நகரில் உள்ள விடுதி ஒன்றில் அறையெடுத்து தங்கியிருந்துள்ளார். இவருடன் உறவினர் ஒருவரும் படித்து வந்ததாக கூறப்படுகிறது. சனியன்று இரவு வரை நண்பர்களுடன் சேர்ந்து ரோஷன் ஒன்றாக படித்துள்ளார். ஆனால் ஞாயிறன்று காலையில் அவர் அறை யை விட்டு வெளியே வரவில்லை. மதிய உணவு வேளையிலும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மாணவர்கள் விடுதி காப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். கதவை திறந்து பார்த்த போது படுக்கையில் மயங்கிய நிலையில் ரோஷன் கிடந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது, அவர் முன்பே உயிரி ழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறி யுள்ளனர். இதுபற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் வக்பு மசோதா நீக்கப்படும்

பீகார் சட்டமன்ற தேர்தலில் “இந்தியா” கூட்டணி ஆட்சி அமைத் தால் வக்பு மசோதா கிழித்து எறி யப்படும் என ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் எம்எல்சி முகமது காரி சோஹைப் கூறியுள்ளார்.  ஆர்ஜேடி வேட்பாளரும், தற்போ தைய எம்எல்ஏவுமான சஞ்சீவ் குமாரை ஆதரித்து பர்பட்டா சட்டமன்றத் தொகு தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில்,”பீகாரின் முத லமைச்சராக தேஜஸ்வியை ஆக்குவ தற்கு மக்கள் “இந்தியா” கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். நாடாளு மன்றத்தில் வக்பு மசோதாவை ஆதரித்த வர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும். அனை த்து தேசிய ஜனநாயக கூட்டாளிகளும் வக்பு மசோதாவை ஆதரித்தனர். “இந்தியா” கூட்டணி தலைமையிலான தேஜஸ்வி முதலமைச்சரானால் வக்பு மசோதா உட்பட அனைத்து மசோதாக்க ளும் கிழித்து எறியப்படும். “இந்தியா” கூட்டணி அரசாங்கம் அன்பு, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்திற்காக நிற்கும். இந்திய கூட்டணிக்கு மட்டும் வாக்களி யுங்கள்” என அவர் கூறினார்.

அரசு மருத்துவமனையில் 5 குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு  

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 5 குழந்தைகள் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கைபாசாவில் உள்ள அரசு மருத்துவமனையில் 7 வய தான குழந்தைக்கு தலாசீமியா பாதிப்பு இருந்துள்ளது. இதையடுத்து அந்தக் குழந்தைக்கு ரத்தம் ஏற்றப்பட்ட நிலை யில், அக்குழந்தைக்கு எச்ஐவி தொற்று ஏற் பட்டுள்ளது. மேலும் 4 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.