states

img

ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாஜகவை தோற்கடிக்கும்

ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாஜகவை தோற்கடிக்கும்

இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை

சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி உறுதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பீகார் மாநி லக் குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் அசோக் தாவ்லே பங்கேற்ற னர். கூட்டத்திற்குப் பின் நடைபெற்ற  செய்தியாளர்கள் சந்திப்பில் எம்.ஏ. பேபி பேசுகையில்,”2025 ஏப்ரல் முதல் வாரத்தில் மதுரையில் நடை பெற்ற சிபிஎம் 24ஆவது அகில  இந்திய மாநாடு, நாடு முழுவதும்  மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் இடது ஜனநாயக மற்றும் மதச்  சார்பற்ற சக்திகளின் பரந்த ஒற்று மையைக் கட்டியெழுப்புவதன் மூலம் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட் டில் உள்ள பாஜக மற்றும் அதன்  கூட்டாளிகளைத் தோற்கடிக்க அழைப்பு விடுத்தது. இந்த அழைப்  பின் முதல் சோதனையாக வர விருக்கும் பீகார் சட்டமன்றத் தேர் தல்கள் இருக்கும். இந்த இலக்கை அடைய பீகார் மகா கூட்டணி ஏற்  கனவே ஒன்றுபட்ட மற்றும் தீவிர மான தயாரிப்புகளைத் தொடங்கி யுள்ளதை சிபிஎம் வரவேற்கிறது.  குறிப்பாக மோடி தலைமை யிலான ஒன்றிய அரசின் தொழிலா ளர் மற்றும் மக்கள் விரோத மற்  றும் பெருநிறுவன சார்பு கொள்கை களுக்கு எதிராக மகத்தான வெற்றி யைப் பெறுவதற்காக, மத்திய தொழிற்  சங்கங்களும் ஐக்கிய விவசாய முன்  னணியும் மே 20 2025 அன்று அகில  இந்திய பொது வேலைநிறுத்தத் திற்கும், கிராமப்புறங்களில் அகில இந்திய வேலைநிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன. இந்த பொது வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வதற்கான அழைப்பை எதிர்க்கட்சிகளின் பீகார் மகா கூட்  டணி முழு மனதுடன் ஆதரித்திருப் பது வரவேற்கத்தக்க நடவடிக்கை யாகும். ஒற்றுமையே நமது வலிமை;  மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றுபடு வோம்” என அவர் அழைப்பு விடுத்  தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே, பீகார் மாநில செயலாளர் லாலன் சவுத்ரி, மத்தியக் குழு உறுப்பினர் அவதேஷ் குமார், மாநில சட்ட மன்றக் கட்சித் தலைவர் அஜய் குமார் ஆகியோர் கலந்து கொண்ட னர்.