states

img

உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து - 6 பேர் பலி!

உத்தரகாண்ட்,மே.08- உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் கங்கநானி அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட சுற்றுலாப் பயணிகள் 6 பேர் உயிரிழந்துள்ளனர் 
வனப்பகுதியில் நடந்த இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.