states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா

நாம் யாரும் போரை விரும்பவில்லை. ஜம்மு-காஷ்மீரில் நிலைமை மேம்பட வேண்டும் என்றே விரும்புகிறோம். அதற்கு நமது அண்டை நாடான பாகிஸ்தான் தங்கள் துப்பாக்கிகளை கீழே போட வேண்டும். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்டுள்ளன. ராணுவ அமைப்புகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

பஹல்காம் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் பகுதியில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இனிமேல் நாட்டில் பயங்கரவாதமோ பிரிவினைவாதமோ இருக்கக்கூடாது. இது தான் மக்களுக்கு நிம்மதியை தரும்.

உச்சநீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த்

நாட்டில் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏராளமான பின்தங்கிய மக்கள் உள்ளனர். அவர்கள் ஏன் இடஒதுக்கீட்டின் பலன்களை பெறக்கூடாது? ஒருசில குடும்பங்கள் மற்றும் குழுக்கள் மட்டுமே இடஒதுக்கீட்டின் சலுகைகளை தொடர்ந்து அனுபவித்து வருகின்றன. இது நல்லதல்ல.

சிரோமணி அகாலிதள தலைவர் சுக்பீர் சிங் பாதல்

“ஆபரேஷன் சிந்தூர்” தக்குதலுக்கு இடையே பஞ்சாப் மாநிலத்தின் குருத்வாரா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மூன்று சீக்கியர்கள் உயிரிழந்தனர். இது மிக மோசமானது. பஞ்சாப்பிலும் பாதுகாப்பு கட்டமைப்பை ஒன்றிய அரசு பலப்படுத்த வேண்டும்.