tamilnadu

img

70 வயதில் சாதித்த மூதாட்டி!

கோவை.மே.08- கோவையில் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 70 வயது மூதாட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.                        
கோவை கலிங்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ராணி, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 346 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். வயது கல்விக்குத் தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், எந்த பயிற்சி நிலையத்தின் உதவியுமின்றி, தனிப்பட்ட முறையில் படித்து தேர்வெழுதி இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
மேலும், அவர் யோகா மற்றும் நேச்சுரோபதி இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர விருப்பம் தெரிவித்து, கல்வியின் மீதான தனது அசைக்க முடியாத ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த சாதனை சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் ராணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவரது விடாமுயற்சியும், கல்வி ஆர்வமும் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.