tamilnadu

img

உளுந்தூர்பேட்டையில் வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்!

கள்ளக்குறிச்சி,மே.08- உளுந்தூர்பேட்டையில் வீட்டு மனை பட்டா கேட்டு 700 பேர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 9 கிராமங்களைச் சேர்ந்த 700 பேர் வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் எம்.வி.ஏழுமலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் டி.ஏழுமலை, மாவட்டச் செயலாளர் ஏ.வீ. ஸ்டாலின் மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் 700 மனுக்கள் கொடுக்கப்பட்டது மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் துணை வட்டாட்சியர் உறுதி அளித்துள்ளார்.