தமிழ்நாடு அமைச்சரவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாடு அமைச்சரவையில் நீர்வளத்துறை மற்றும் கனிமம் மற்று சுரங்கத் துறை அமைச்சராக துரைமுருகனும், சட்டத்துறை அமைச்சராக எஸ்.ரகுபதியும் இருந்து வந்தனர். இந்நிலையில், அமைச்சரவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கூடுதலாக சட்டத்துறையும், சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதிக்கு கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.