புதுதில்லி,மே.08- OTT தளங்களுக்கு ஒன்றிய அரசு விதித்துள்ள கட்டுப்பாடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில் பாகிஸ்தானில் தயாரான திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் தொடர்களை நீக்க இந்தியாவில் செயல்படும் OTT தளங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
தேச பாதுகாப்பு கருதி OTT தளங்களுக்கு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.