5 ஆம் ஆண்டு தொடக்கம் : 214 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர்
சென்னை, மே 7- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 4 ஆம் ஆண்டை நிறைவு செய்து 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதை யொட்டி, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக, 3,727 புதிய பேருந்து களும், 1500 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டும் பயன்பாட்டில் உள்ளன. இதன் தொடர்ச்சியாக, புதனன்று சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 214 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, அ.ராசா, அமைச்சர்கள் அன்பில் மகேஸ்பொய்யாமொழி,சேகர்பாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.