அரசின் திட்டங்களை மேலும் செம்மைப்படுத்தும் கருத்துகள், ஆலோசனைகளை வழங்க வேண்டும்
ஊடகத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை, மே 7- அரசின் திட்டங்களை மேலும் செம்மைப்படுத்து வதற்கான கருத்துகள், ஆலோசனைகள் இருந்தால் ஊடகங்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி யையும், தனித்துவத்தையும் மக்களிடம் எடுத்துரைக்கு மாறும் ஊடகத்தினரை முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். சென்னை, கலைவாணர் அரங்கில் செவ்வாயன்று (மே 6) நடைபெற்ற பத்திரி கையாளர்கள், ஊடகத் துறையினர் சந்திப்பு நிகழ்ச்சி யில் பங்கேற்று அவர் பேசியதாவது: “2021-இல், தமிழ்நாட்டில் மக்களுடைய நம்பிக்கை யையும், ஆதரவையும் பெற்று, ஆறாவது முறையாக திமுக ஆட்சி அமைந்தது. மே 7-ஆம் நாள் நான் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண் டேன். மே-7 திமுக அரசு ஐந்தாவது ஆண்டில் அடி யெடுத்து வைக்கப் போகிறது. தேர்தல் அறிக்கையில் சொன்ன பெரும்பாலான வாக்குறுதிகளை நிறை வேற்றி இருக்கிறோம். தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களை யும் தொலைநோக்குப் பார்வையோடு அதையும் நிறைவேற்றிக் கொண்டி ருக்கிறோம். ஒவ்வொரு நாளும், புதிய புதிய திட்டங்களை அறிவிக்கி றோம், நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் எந்த மாதிரி யான சூழலில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம், மற்ற எல்லோரையும் விட பத்திரிகையாளர்களான உங்களுக்குத் தான் நன்றாக தெரியும். முந்தைய ஆட்சி யாளர்களால் சீரழிந்த பத்தாண்டு கால நிர்வாகம் ஒரு பக்கம். மதவாதம் உள்ளிட்ட பிற்போக்குத் தனங்களுக்கு இடமளித்து, இந்திய நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த நிலை ஒரு பக்கம். தமிழ்நாட்டுக்கு எந்தவித ஒத்துழைப்பையும் தர மறுக்கும் ஓன்றிய அரசு இன்னொரு பக்கம். இதையெல்லாம் சமாளித்து நாம் ஆட்சி நடத்திக் கொண்டிருக் கிறோம். தமிழ்நாட்டை மீண்டும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், விடியல் பயணம் திட்டம், முதல மைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள், நான் முதல்வன் திட்டம் என்று ஏராளமான திட்டங்களை வரிசைப் படுத்தி சொல்லிக் கொண்டே இருக்க முடியும். இந்தச் சாத னைகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் உங்களுடைய பங்கு மிக அதிகம். நீங்கள் நேர்மையாக வும், ஆக்கப்பூர்வமான அணுகுமுறையோடும் செயல்பட்டதால்தான் அரசின் சாதனைகள் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறது. இதற்காக நான் எத்தனை முறை உங்களுக்கு நன்றி சொன்னாலும் தகும். என்னைப் பொறுத்த வரைக்கும், விமர்சனங் களை முன்வைத்தால், அதனை ஆக்கப்பூர்வமாக நான் ஏற்றுக்கொள்கிறவன். ஆலோசனைகள் இருந் தால், அதை உடனடியாக செயல்படுத்த உத்தர விட்டிருக்கிறேன். இந்தியா விற்கே முன்மாதிரியாக பல திட்டங்களைச் செயல் படுத்திக்கொண்டு இருக்கி றோம். நம்முடைய திட்டங் களை பார்த்து, பல்வேறு மாநில அரசுகள் அந்த திட்டங்களை அவர்கள் மாநிலங்களிலும் செயல் படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட திட்டங் களை, நீங்கள் மனப்பூர்வ மாக பாராட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள் கிறேன். விமர்சிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அரசின் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்துவதற்கான கருத்துகள், ஆலோசனை கள் இருந்தால் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள், அந்த திட்டங்களை இன்னும் சிறப்பாக செயல்படுத்து வோம். எல்லோருடைய கருத்து களையும் கவ னத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். ஆனால், சில ஊடகங்கள் விமர்சிப்பதில் காட்டும் ஆர்வத்தை, நல்ல திட்டங்களை பாராட்டு வதில் அதிக கவனம் செலுத்துவது இல்லை. எல்லோரையும் சொல்ல வில்லை. பாராட்டுவதில் மட்டும் மென்மையான போக்கைத்தான் கடைப் பிடிக்கிறார்கள். சமத்துவம், சமூகநீதி, சமதர்மம் , சகோதரத்துவம், மதச்சார்பின்மை, மொழிப் பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி ஆகிய அரசியல் பண்பாடுகளைக் கொண்ட மண், நம்முடைய தமிழ்நாடு. இந்த லட்சியங்களை அடையும் பயணத்தில் நாங்கள் இருக்கிறோம். இந்தப் பயணத்தில், ஊட கங்களான உங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. எனவே, தனிப்பட்ட ஸ்டாலினையோ, திமுக அரசையோ நீங்கள் பாராட்ட வேண்டும் என்று நான் கேட்கவில்லை. தமிழ் நாட்டை பாராட்டுங்கள் என்றுதான் கேட்டுக்கொள் கிறேன். தமிழ் நாட்டின் வளர்ச்சியையும், தனித்து வத்தையும் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் துணையோடு தமிழ்நாட்டை நிச்சயம் வளர்த்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். துணைமுதலமைச்சர் உதயநிதிஸ்டாலின், நிதிய மைச்சர் தங்கம் தென்னரசு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள் தங்களது துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் சாதனைகளை விளக்கிப் பேசினர். மூத்த பத்திரிகை யாளர்கள் பேசுகையில், இதுபோன்ற ஊடக சந்திப்பை அடிக்கடி முதலமைச்சர் நடத்தும் போது ஊடகத்தினருக்கும் அரசுக்கும் உள்ள இடை வெளிகுறையும் என்றும் ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றங்களுக்கு அது வழிவகுக்கும் என்றும் கேட்டுக் கொண்டனர். முன்னதாக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அனைவரையும் வரவேற்றார். நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன் நன்றி கூறி னார். தலைமை செயலாளர் முருகானந்தம், பல்வேறு துறைகளின் செயலர்கள் உள்ளிட்ட உயர்அதிகாரிகள் இந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.