சிபிஐ அமைப்பை ஏன் அரசியலுக்காக பயன்படுத்துகிறீர்கள்? மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆளும் ஜார்க்கண்ட் மாநில சட்ட மன்ற அலுவலர் பணி நியமனத்தில் முறை கேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த ராஞ்சி உயர்நீதி மன்றம் 2024ஆம் ஆண்டு செப்., மாதம் மத்தியப் புலனாய்வு முகமை (சிபிஐ) விசாரிக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஜார்க்கண்ட் அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித் தது. இடைக்காலத் தடை அமலில் உள்ள நிலையில், விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிஐ இடையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் அமர்வு முன்பு செவ்வாய்க்கிழ மை அன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதத்திற்குப் பின்பு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு,”அரசு இயந்திரத்தை அரசி யல் மோதல்களுக்காக ஏன் பயன் படுத்துகிறீர்கள்? பல முறை எச்சரித்து விட்டோம். ஆனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் சிபிஐ தாக்கல் செய்த இடையீட்டு மனுவை விசாரிக்க முடியாது” என உத்தரவிட்டார்.