states

இயக்குநர் ராஜமவுலிக்கு இந்துத்துவா குண்டர்கள் மிரட்டல்

இயக்குநர் ராஜமவுலிக்கு இந்துத்துவா குண்டர்கள் மிரட்டல்

பாகுபலி திரைப்பட இயக்குநர் ராஜமவுலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்திற்கு “வாரணாசி” என டைட்டில் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிமுக டீசர் விழாவில் (ஹைதராபாத்தில் நடைபெற்றது) ராஜமவுலி பேசுகையில்,”எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் என் அப்பா, அனுமன் நமக்கு பின்னால் இருந்து அனைத்தையும் கவனித்துக் கொள்வார் என்றார். அவர் இப்படித்தான் கவனித்துக்கொள்கிறாரா இதை நினை த்து எனக்கு கோபம் வருகிறது. என் மனை விக்கும் அனுமன் மீது அன்பு உண்டு.  அவர் ஒரு நண்பரைப் போல அவருடன் உரையாடுகிறார். எனக்கும் அவர் மீது கோபம் வருகிறது.  இந்நிலையில், இயக்குநர் ராஜமவுலி இந்துக் கடவுளான அனுமனை அவமதித்து விட்டார் என தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள காவல் நிலையம் ஒன்றில் இந்துத்துவா குண்டர்கள் புகார் அளித்துள்ளனர்.  மேலும் ராஜமவுலிக்கு சமூக வலைத்தளங்களில் இந்துத்துவா குண்டர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளி யாகியுள்ளன.