states

45 பேரின் உடல்களை சவூதியிலேயே அடக்கம் செய்ய ஏற்பாடு?

45 பேரின் உடல்களை சவூதியிலேயே அடக்கம் செய்ய ஏற்பாடு?

இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் மெக்காவுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். திங்களன்று அதிகாலை 1 மணி அள வில் சவூதி அரேபியாவில் இந்த யாத்தி ரைக்கு சென்றவர்களை ஏற்றிக் கொண்டு, மெக்காவில் இருந்து மதீனா வுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து முப்ரிஹட் என்ற இடத்தில் டீசல் டேங்கர் லாரியுடன் மோதி தீப்பிடித்தது.  இந்த கோர விபத்தில் 45 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்றவர்கள் என்று கண்ட றியப்பட்டுள்ளது.  இந்நிலையில், மெக்கா பேருந்து விபத்தில் உயிரிழந்த 45 பேரின் உடல்கள் கருகிய நிலையில் இருப்பதால், உடல் களை சவூதியிலேயே அடக்கம் செய்ய  தெலுங்கானா அரசு ஏற்பாடு செய்துள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு குடும்பத்திற்கு தலா 4 பேரை அரசு செலவில் இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.