சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அம்ரா ராம்
தில்லி காற்று மாசுபாட்டால் கடுமையாக மூச்சு திணறி வருகிறது. சாதாரண அப்பாவி மக்கள் மாசுபாட்டால் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாஜக இரட்டை எஞ்சின் அரசாங்கங்கள் பெரிய தொழிற்சாலைகளையும், முதலாளிக ளையும் பாதுகாக்க மட்டுமே முயற்சி மேற்கொண்டு வருகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்
நீதித்துறையின் செயல்பாடுகள் அவசியமானவை தான். குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சட்டமன்றமோ அல்லது நிர்வாகத்துறையோ தவறும்போது மட்டுமே நீதித்துறை தலையிட வேண்டும். நீதித்துறை தனது வரம்பை மீறினால் அதுவும் ஒருவகை பயங்கரவாதம் தான்.
ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்
“மகாராணி - 4” வலைத்தொடரை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும். பீகார் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்படும் ராணி பார்தி (ஹூமா குரேஷி) தேசிய அரசியல் களத்தில் நுழைந்து பிரதமருடன் அதிகாரப் போட்டியில் ஈடுபடுவதை மையமாக வைத்து இந்த சீசனின் கதை நகர்கிறது. இது இன்றைய அரசியலின் அசிங்கமான யதார்த்தத்தை தோலுரித்துக் காட்டுகிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
ஜனநாயக நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில், எஸ்ஐஆர் மூலம் தேர்தல் ஆணையத்தின் நடத்தை மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. எஸ்ஐஆர் பாஜகவின் நிழலில் செயல்படவில்லை என்பதை நிரூபிக்க முடியுமா?
