states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பீகார், மேற்குவங்கம் ஆகிய இரு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுகுறித்து அடுத்த 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர்- தில்லி நெடுஞ்சாலையில் தொழிலாளர்களை ஏற்றி வந்த பேருந்து உயர்அழுத்த மின்கம்பியில் உரசி தீப்பிடித்ததில் 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்தில் புதன்கிழமை அன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். முசாபர்பூர், தர்பங்கா ஆகிய 2 இடங்களில் “இந்தியா” கூட்டணி வேட்பாளர் களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளார்

ராஜஸ்தான் மாநிலத்திலும் “மோந்தா” புயலால் கனமழை பெய்துள்ளது. அம்மாநிலத்தின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கனமழை முதல் அதீத அளவில் கனமழை பெய்துள்ளது. அதிக பட்சமாக பண்டி மாவட்டத்தின் நைன்வா பகுதியில் 130 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியிருப்பதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். 

8ஆவது ஊதியக் குழு அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

ஊழியர்களின் சம்பளம் மற்றும் பிற சலுகைகளில் மாற்றங்களை ஆராய்ந்து பரிந்துரைக்க  8ஆவது ஒன்றிய ஊதிய ஆணையக் குழு அமைக்கப்படுவதாக அமைச்சரவை ஜனவரி 2025இல் அறிவித்தது.  இந்நிலையில், தொடர்ந்து ஊதி யக்குழு உறுப்பினர்கள் நியமனத்திற்கு ஒன்றிய அமைச்சரவை செவ்வாய்க்கிழ மை அன்று ஒப்புதல் அளித்தது. அதன்படி 8ஆவது ஊதியக் குழு தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமனம் செய்யப்பட்டு ள்ளார். உறுப்பினர்களாக ஐஐஎம் பெங்களூரு பேராசிரியர் புலாக் கோஷ் (பகுதி நேர) மற்றும் தற்போதைய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு செயலாளர் பங்கஜ் ஜெயின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழு தனது பரிந்துரைகளை 18 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும் என ஒன்றிய அமைச்சரவை தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.