கடந்த 1984ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி அன்று மத்தியப்பிர தேசம் மாநிலம் போபாலில் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைட் ரசாயன ஆலையில் விஷவாயு கசிந்தது. இந்த கோர விபத்தில் அப்பாவி பொதுமக்கள் 5,479 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். பல லட்சம் மக்கள் கண்பார்வை இழப்பு மற்றும் விஷவாயு தாக்கத்தின் காரண மாக நோயுற்று பின்னாளில் உயிரி ழந்தனர். விபத்துக்கு பின்னர் யூனியன் கார்பைட் ஆலை மூடப்பட்ட போதும், பல டன் எடையுள்ள நச்சுக் கழிவுகள் அகற்றப்படாமல் அங்கேயே இருந்தன. இது தொடர்பான வழக்கில் 4 வாரங்களில் நச்சுக் கழிவுகளை அகற்ற மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் டிசம்பர் 3ஆம் தேதி கெடு விதித்தது. அதைத் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு பின்னர் நச்சுக் கழிவுகளை அகற்றும் பணியை போபால் விஷவாயு விபத்து நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறை திங்கள்கிழமை தொடங்கி உள்ளது. 337 டன் எடையுள்ள கழிவு கள், காற்றுப்புகாத பெட்டிகளில் அடைக் கப்பட்டு காற்று புகாதபடி பிரத்யேக மாக வடிவமைக்கப்பட்ட 12 கன்டெய்னர்க ளில் வைக்கப்பட்டு வருகின்றன. நச்சுக் கழிவுகளை பொட்டலம் கட்டும் பணி யில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.