states

தீக்கதிர் விரைவு செய்திகள்

“மோடி திறந்து வைத்த ‘கூடார நகரம்’ சுற்றுச்சூழல் விதிகளுக்கு எதிரானது”

உத்தரப்பிரதேச மாநிலம் வார ணாசியின் கங்கை நதிக்கரை யில் அமைக்கப்பட்ட “கூடார நக ரத்தை (சுற்றுலாவை மேம்படுத்த தற்காலிக சொகுசு தங்கும் வசதி)” கடந்த  2023ஆம் ஆண்டு பிரதமர் மோடி திறந்து  வைத்தார். ஆனால், இந்த கூடார நகரம்  சுற்றுச்சூழல் விதிகள் மற்றும் 2016ஆம்  ஆண்டின் கங்கை நதி (புத்துயிர் அளித் தல், பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) ஆணையத்தின் உத்தரவுகளை மீறியது என தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்ட னம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறுகையில்,”கூடார நக ரத்திலிருந்து வெளியேறிய கழிவுநீர் நேரடியாக கங்கை நதியில் கலக்கிறது. இதனால் நதியின் சுற்றுச்சூழல் மற்றும்  உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்  ளது. குறிப்பாக இந்தத் திட்டத்தை செயல் படுத்திய தனியார் நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீடு வழங்க உத்தர விடப்பட்டுள்ளது. அந்தத் தொகையை விரைவாக வசூலிக்க வேண்டும் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தீர்ப்பா யம் கூறியுள்ளது.

“புறக்கணிப்பை எதிர்கொள்பவர்களின் போராட்டங்களும்

வாழ்க்கையும் ஆவணப்படுத்தவில்லை” கேரள சட்டமன்ற சர்வதேச  புத்தகத் திருவிழாவில்  (KLIBF) ‘மௌனமாகிவிட்ட வர்களை மீட்டெடுப்பது: வரலாற்று எழுத்  தில் மாற்றும் கருப்பொருள்கள்’ என்ற  தலைப்பில் இளம் எழுத்தாளர் வினில்  பால் பேசுகையில்,”வாசிப்பு என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு சரியான வரலாற்று உணர்வை  வடிவமைக்கும் ஒரு அரசியல் செயல்  பாடு. நவீனகால வரலாற்று எழுத்தின்  முதன்மை நோக்கம், உணர்வுபூர்வமா கவோ அல்லது கோட்பாடுகளின் பெய ரிலோ வரலாற்றின் பக்கங்களில் இருந்து விடுபட்டவர்களின் வாழ்க்கையை மீட்  டெடுப்பதாகும். கடந்த கால வரலாற்று எழுத்துக்கள் அதிகார மையங்கள் மற்  றும் உயர் வர்க்கத்தை மட்டுமே மைய மாகக் கொண்டிருந்தன. திருவிதாங்கூர் ஆட்சியாளர்களின் சகாப்தத்தை மைய மாகக் கொண்டு பி. சங்குண்ணி மேனனின்  வரலாற்றை எழுதுவது இதற்கு ஒரு  எடுத்துக்காட்டு. இருப்பினும், சமூகத்தின்  அடிமட்டத்தில் புறக்கணிப்பை எதிர் கொள்பவர்களின் போராட்டங்களும் வாழ்க்கையும் போதுமான அளவு ஆவ ணப்படுத்தப்படவில்லை. வரலாற்றை எழுதுவதற்கு அதிகாரப்பூர்வ ஆவ ணங்களை மட்டுமே நம்பியிருக்கும் முறை மாற வேண்டும். வாய்மொழி மரபு,  பாடல்கள் மற்றும் பிரபலமான நினைவு கள் வரலாற்று எழுத்துக்கான முக்கிய ஆதாரங்களாக மாற வேண்டும். கேரளா வில் அடிமைத்தன முறை மற்றும் அதற்கு  எதிரான அமைதியான எதிர்ப்பு” என  அவர் கூறினார். இறுதியாக வரலாற்று எழுத்தில் புதிய போக்குகள் குறித்து வாச கர்களுடன் வினில் பால் கலந்துரையாடினார்.

“சட்டமன்ற உறுப்பினராக ராகுல் மாங்கூட்டத்தில் நீடிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும்”

கேரள மாநிலம் பாலக்காடு சட்  டப்பேரவை தொகுதி உறுப்பி னராக இருப்பவர் ராகுல் மங்கூட்டத்தில். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் பாலியல் துன்புறுத்தல் புகாரின் பேரில் ஞாயிறன்று அதிகாலை பாலக்காட்டில் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் பத்தனம்திட்டா ஆயு தப்படை முகாமுக்கு அழைத்துச் செல் லப்பட்டு, எஸ்ஐடி தலைவர் பூங்குழலி தலைமையில் விசாரணைக்கு உட்  படுத்தப்பட்டார். மருத்துவ பரிசோத னைக்குப் பிறகு அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் சிறையில் அடைக்கப்பட்டார். ராகுல் மங்கூட்டத்திலை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்த போதும், மாவேலிக்கரை சிறைக்கு கொண்டு வரப்பட்டபோதும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட இளை ஞர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். ராகுல் தனது எம்எல்ஏ பதவியை ராஜி னாமா செய்ய வேண்டும் என்று கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் ராகுல் மங்கூட்டத்தில் எம்எல்ஏ, அவர்  மீது மூன்றாவதாக ஒரு பெண் அளித் துள்ள புகாரின் போரில் மீண்டும் இப் போது கைது செய்யப்பட்டுள்ளார் என் பது குறிப்பிடத்தக்கது. சபாநாயகர் ஆலோசனை தொடர்ச்சியான பாலியல் புகார் களை அடுத்து ராகுல் மங்கூட்டத்தை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வது குறித்து சட்ட ஆலோ சனை பெற உள்ளதாக கேரள சபாநாய கர் ஏ.என்.ஷம்சீர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்த  பிறகு இந்த விவகாரத்தில் முடிவு எடுக்  கப்படும்” என சபாநாயகர் கூறினார்.

புதுதில்லி ஆர்எஸ்எஸ் துணைவேந்தர்களால் சீரழியும் இந்திய பல்கலைக்கழகங்கள்

உலகளாவிய பல்கலைக் கழகங் களின் கல்வித் தரவரிசை சமீ பத்தில் வெளியானது. இந்தத் தர வரிசையில் முதல் 500 பல்கலைக் கழகங்  களில் இந்தியா இடம்பெறவில்லை. இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் உச்சநீதிமன்ற மூத்த  வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறுகை யில்,”உலகின் முதல் 500 பல்கலைக் கழ கங்களில் இந்தியாவின் ஒரு பல்கலைக்  கழகம்கூட இல்லை. விஸ்வகுருவாக (மோடி) வேண்டும் என்ற கூற்றின் உண்மை இதுதான். மோடி ஆட்சி யில், உயர் சிந்தனை மற்றும் அறிவியல்  அறிவை அழி