“வங்கதேசத்தவர்” என்று கூறி மேற்கு வங்க தொழிலாளர்கள் மீது தாக்குதல்
ராய்ப்பூர் பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தின் சுராஜ்பூர் மாவட்டத்தில் ஜெயதுர்கா என்ற பெயரில் ரொட்டித் தொழிற் சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை யில் மேற்கு வங்க மாநிலம் புரு லியா மாவட்டத்தைச் சேர்ந்த 8 தொழி லாளர்கள் வேலை செய்து வந்துள்ள னர். இவர்கள் அனைவரும் முஸ்லிம் கள் ஆவர். தங்களுக்கு வழங்கப்பட வேண் டிய நியாயமான ஊதியத்தை தொ ழிற்சாலை உரிமையாளரிடம் அந்த 8 தொழிலாளர்களும் கேட்டுள்ளனர். தொழிலாளர்கள் ஊதியம் கேட்டதும், ஜனவரி 4 அன்று தொழிற்சாலை உரி மையாளரின் தூண்டுதலின் பேரில் பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த இந்துத்துவா குண்டர்கள் தொழிற் சாலைக்குள் புகுந்து, தொழிலா ளர்களின் செல்போன்களைப் பறித்து, நீங்கள் ‘வங்கதேசத்தவர்கள்’ மற்றும் ‘சட்டவிரோதமாகக் குடியேறிய வர்கள்’ என்று கூறியபடி மிகக் கொடூர மாகத் தாக்கியுள்ளனர். ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளைக் காட்டியும், தாங்கள் இந்தியர்கள் என்று கெஞ்சியும் கூட இந்துத்துவா கும்பல் தொடர்ச்சியாக அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு ஷேக் ஜாசிம், அஸ்லாம், ஷேக் பாபி, ஷேக் ஜுல்புகார் ஆகிய 4 தொழிலாளர்கள் எப்படியோ தப்பித்துத் தங்களின் சொந்த ஊரான புருலியாவுக்குத் திரும்பிவிட்டனர். புருலியாவிற்கு தப்பிச் சென்ற தொழிலாளர்கள் அளித்த புகாரின் (மேற்கு வங்க காவல்துறை மூலம்) அடிப்படையில் தொழிற்சாலையில் சிக்கிக்கொண்ட ஷேக் இஸ்மாயில், ஷேக் மினார், அர்பாஸ் காசி, ஷேக் சாஹில் ஆகிய 4 பேரும் மீட்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் சுராஜ்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கைது இல்லை இந்தச் சம்பவம் தொடர்பாகச் சத்தீஸ்கர் காவல்துறை வழக்கு மட்டுமே பதிவு செய்துள்ளது. ஆனால் தொழிற்சாலை உரிமை யாளர், இந்துத்துவா குண்டர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் மீது தொ டர்ச்சியாக நடத்தப்படும் வகுப்புவாத கண்ணோட்டத்துடனான தாக்குதல் கள் புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
