தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதேபோல் புதுச்சேரி, அசாம், கேரளா ஆகிய 3 மாநிலங்களில் 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல். 09 ஆம் தேதி நடைபெறுகிறது.
மேற்கு வங்கத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 23ஆம் தேதியும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 29ஆம் தேதியும் நடைபெறுகிறது. 5 மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கையும் மே 04ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழ்நாட்டை பொருத்தவரை; மார்ச். 30ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி ஏப்ரல். 06 முடிவடைகிறது. ஏப்.07ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை மற்றும் ஏப்.09 வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள் ஆகும்.
