நடன கலைஞர்களுக்கு தனி நல வாரியம் அமைத்திடுக
நாமக்கல், ஜன.12- பள்ளிபாளையம் ஆவரங்காடு சனிசந்தை பகுதியில் தென்னிந்திய திரைப்பட மேடை நடன கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடன கலைஞர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க கோரிக்கை விடுத்தனர். தென்னிந்திய திரைப்பட மேடை நடன கலைஞர்கள் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை ஒட்டி, நலிந்த கலைஞர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ரத்ததான முகாம் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஆவரங்காடு சனிசந்தை பகுதியில் ஞாயி றன்று நடைபெற்றது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நடன கலை ஞர்கள் அரசியல் தலைவர்கள் எம்.ஜி.ஆர், கலைஞர் கருணா நிதி மற்றும் திரை கலைஞர்கள் வேடம் அணிந்து ஊர்வல மாக வந்தனர். மேலும் இந்த நிகழ்வில் கரகாட்டம், குதிரை ஆட்டம், பொய்க்கால் ஆட்டம், உள்ளிட்டவை மேளதாளங் கள் முழங்க மிக உற்சாகமாக நடைபெற்றது. இதுகுறித்து சங்க பொதுச் செயலாளர் தர்மலிங்கம் கூறும் பொழுது, மேடை நடன கலைஞர்கள் தமிழகத்தில் 3 லட் சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேடை நடன கலை ஞர்களுக்கென தனி நல வாரியம் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அரசு சார்பில் நடைபெறும் நாட்டுப்புற கலைகளில், மேடை நடனத்தையும் சேர்த்து எங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், நடன கலை ஞர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். அதே போல நலிவடைந்த கலைஞர்களுக்கு மாதம்தோறும் உதவித் தொகை வழங்கி, அனைத்து நடன கலைஞருக்கும் வாழ்வா தாரம் காக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.
