பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம்
கடலூர், ஜன. 12- கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நல்லூரில், தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பசும்பால் ஒரு லிட்டர் 45 ரூபாய்க்கும், எருமைப்பால் ஒரு லிட்டர் 60 ரூபாய்க்கும் உயர்த்தி வழங்கக் கோரி ஏ.சாமிதுரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மணிவேல், கந்தசாமி, வேல்முருகன், பூமாலை, செல்வராசு, செல்வி, தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கறவை மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாடு விவசாய சங்க கடலூர் மாவட்டத் தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் கண்டன உரையாற்றினார்.
