விவசாயம், பால்வளத் துறைகளை அமெரிக்காவிற்குத் திறந்துவிடும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம்
புதுதில்லி தில்லியில் உள்ள ஹெச்.கே.எஸ்.சுர்ஜித் பவனில் ஜன., 11 அன்று ஐக்கிய விவ சாயிகள் முன்னணி (எஸ்கேஎம்) தேசிய கவுன்சில் கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டம் தொடர்பாக எஸ்கேஎம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயம் மற்றும் பால்வளத் துறைகளை அமெரிக்காவிற்குத் திறந்துவிடும் வகையில் அந்நாட்டு டன் தடையற்ற வர்த்தக ஒப்பந் தத்தில் கையெழுத்திட வேண்டாம் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்திற்கு எஸ்கேஎம் எச்சரிக்கை விடுக்கிறது. அமெ ரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் கார்ப்ப ரேட் சக்திகளின் அழுத்தத்திற்குப் பணிந்து நாட்டின் நலன்களை விட்டுக் கொடுக்க வேண்டாம் என விவசாயிகளையும், பொது மக்களையும் எஸ்கேஎம் கேட்டுக் கொள்கிறது. மீறினால் 2020-21ஆம் ஆண்டில் தில்லி எல்லை யில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்தை விடப் பெரிய அளவிலான போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 2025ஆம் ஆண்டின் மின்சார திருத்த மசோதாவை (Electricity Bill 2025) அரசாங்கம் நிறைவேற்றினால், அதற்கு அடுத்த நாளே நாடு முழுவதும் தீவிர மான போராட்டங்களை நடத்து மாறு விவசாயிகளுக்கும் தொழிலா ளர்களுக்கும் எஸ்கேஎம் அழைப்பு விடுக்கிறது. அதே போல மின்சார திருத்த மசோதா 2025, விபி ஜி ராம் ஜி சட்டம் 2025, விதைகள் மசோதா 2025, தொழிலாளர் நலச் சட்டத் தொ குப்புகள் (4 Labour Codes) உள்ளிட்டவைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தீர்மா னம் மூலமாக வலியுறுத்தப் பட்டுள்ளது. மேலும், அனைத்துப் பயிர்க ளுக்கும் சி2+50% அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்க வேண்டும்; விவசாயிகளைத் தற்கொலையி லிருந்து மீட்க முழுமையான கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் மற்றும் 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மாநில உரிமைகள் மற்றும் வரிப்பகிர்வு மாநிலங்களின் கூட்டாட்சி உரி மைகளைப் பாதுகாக்கும் வகை யில் ஜிஎஸ்டி (GST) சட்டத்தைத் திருத்தி வரி விதிப்பு அதிகாரத்தை மீண்டும் மாநிலங்களுக்கே வழங்க வேண்டும் என்றும், ஒன்றிய வரி வருவாயில் மாநிலங்களின் பங்கினை தற்போதைய 31 சத வீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் தீர்மா னம் வலியுறுத்துகிறது. போராட்டத் திட்டங்கள் Hஜனவரி 16 (அகில இந்திய எதிர்ப்பு நாள்) அன்று மாவட்ட, ஒன்றிய மற்றும் கிராம அளவில் போராட்டங்கள் நடத்தப்படும். வெற்றியை அடையும் வரை தொடர்ச்சியான போராட்டங்க ளை முன்னெடுக்க அன்று உறுதிமொழி எடுக்கப்படும். Hஜனவரி 19 அன்று லக்கிம்பூர் கேரியில் (உ.பி.,) பொதுக் கூட்டம் நடத்தப்படும். Hஜனவரி 26 (மக்களின் பேரணி) குடியரசு தினத்தன்று ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், சோனம் வாங்சுக் உட்பட விசார ணையின்றி சிறையில் உள்ள வர்களை விடுதலை செய்யவும் வலியுறுத்தி டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் பேரணிகள் நடத்தப்படும். Hபிப்ரவரி 12 (பொது வேலை நிறுத்தம்) அன்று தொழிலாளர்க ளின் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதர வாக விவசாயிகள் வீதியில் இறங்கி மாபெரும் ஆர்ப்பாட்டங் களை நடத்துவார்கள். பின்னர் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அடுத்த தேசியக் கவுன்சில் கூட்டம் பிப்ரவரி 24 அன்று ஹரியானாவில் நடை பெறும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய அரசு முன்வராவிட்டால், அந்த கூட்டத்தில் மேலதிக போ ராட்ட நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
