tamilnadu

img

இந்தியாவின் 2 எண்ணெய்க் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி!

இந்தியாவின் 2 எண்ணெய்க் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி!

டெஹ்ரான்/புதுதில்லி, மார்ச் 12 - ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து செல்வதற்கு, இந்தியாவின் 2 எண்ணெய்க் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இந்தியாவுக்கு சொந்த மான ‘புஷ்பக்’ மற்றும் ‘பரிமல்’ ஆகிய எண்ணெய்க் கப்பல்கள் ஹோர்முஸ் நீரி ணையை பாதுகாப்பாக கடந்துள்ளன.  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் நடத்திய அவ சரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல  இந்தியாவின் 2 எண்ணெய்க் கப்பல் களுக்கு ஈரான் அனுமதி வழங்கியது. அமெரிக்கா - இஸ்ரேலுடனான யுத்தப் பின்னணியில், முக்கியமான கப்பல் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. நீரிணையைக் கடக்க விரும் பும் எந்தவொரு கப்பலும் ஈரானின் முன் அனுமதியைப் பெறுவது கட்டாயம். இல்லையெனில் அவை தாக்குதலு க்கு உள்ளாகும் என ஈரானின் இஸ்லா மிய புரட்சிகர காவல்படை (IRGC) கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் அலி ரேசா தங்சிரி எச்சரிக்கை விடுத்திருந்தார்.  ஆனால், ஈரானின் எச்சரிக்கையை புறக்கணித்து விட்டு, ஹோர்முஸ் வழி யாக வரும் எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்க ராணுவம் பாதுகாப்பு தரும் என்று டிரம்ப் அறிவித்தார். அவரின் வாக்குறுதியை நம்பி புதன்கிழமை

ஐ.நா.வில் எதிராக வாக்களித்து மோடி அரசு துரோகம்!

ஒருதலைபட்சமான தீர்மானம் என ரஷ்யா, சீனா எதிர்ப்பு

நியூயார்க், மார்ச் 12 - மேற்கு ஆசியாவில் போர்ப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வளைகுடா நாடுகள் (GCC) மற்றும் ஜோர்டான் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களைக் கண்டித்து, ஐ.நா. பாதுகாப்பு அவையில் ஒருதலைப்பட்சமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா - இஸ்ரேலின் திட்டப்படி பஹ்ரைன் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை ஆதரித்து, இவ்வளவு காலமும் பின்பற்றி வந்த வெளியுறவுக் கொள்கைக்கும், ஈரானுக்கும் மோடி அரசு துரோகம் இழைத்துள்ளது. அதேநேரம், ஈரானுக்கு எதிரான இந்த தீர்மானம், ஒருதலைப்பட்சமானது என ரஷ்யாவும் சீனாவும் கடுமையாக விமர்சித்து, வாக்கெடுப்பைப் புறக்கணித்துள்ளன. வளைகுடா நாடுகள் தங்களுக்கு எதிரி இல்லை என்றாலும், அமெரிக்கா வளைகுடா நாடுகளில்  ராணுவத் தளங்களை அமைத்து, அங்கிருந்து தான் ஈரானைத் தாக்குகிறது என்பதால், பதிலுக்கு அந்த ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்று அறிவித்தே வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் தாக்கி வருகிறது.  அமெரிக்கா தந்திரமாக வளைகுடா நாடுகளை பிரச்சனையில் சிக்க வைத்து, தான் தப்பித்துக் கொண்டுள்ளது. அத்துடன், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளையே தூண்டிவிட்டு, ஈரானுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானம் ஒன்றையும் கொண்டு வந்தது. இதனைத் தான், இந்தியா உள்ளிட்ட 135 நாடுகள் ஆதரித்து, தீர்மானத்தை வெற்றிபெற வைத்துள்ளன. 15 நாடுகள் கொண்ட பாதுகாப்பு அவையிலும், அமெரிக்காவின் தலைமையில் நடந்த வாக்கெடுப்பில், இந்தியா உட்பட 13 நாடுகள் ஈரானுக்கு எதிராக வாக்களித்துள்ளன. சட்டவிரோதமான தீர்மானம் இந்தத் தீர்மானம் அநீதியானது, சட்டவிரோதமானது என ஈரான் திட்டவட்டமாக கூறியுள்ளது. ஐ.நா.,வுக்கான ஈரானின் தூதர் அமீர் சையத் இராவானி பேசுகையில், பிப்ரவரி 28 முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் மதத் தலைவர் அயதுல்லா காமேனியைப் படுகொலை செய்து, 1,300-க்கும் மேற்பட்ட பொதுமக்களையும் கொன்றுள்ளன. ஒரு நாட்டை ஆக்கிரமிப்பு செய்வது யார், பாதிக்கப்பட்டவர் யார் என்பதைத் தீர்மானம் மாற்றிச் சொல்கிறது. அமெரிக்கா - இஸ்ரேலும் 160 பள்ளிக் குழந்தைகள்  குண்டு வீசி படுகொலை செய்ததை மூடிமறைக்கச் சில நாடுகள் முயற்சி செய்கின்றன என குற்றம் சாட்டினார்.   ரஷ்யா, சீனா எதிர்ப்பு  ‘வீட்டோ’ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பி னர்களான ரஷ்யாவும் சீனாவும் இந்தத் தீர்மான த்தின் மீதான வாக்கெடுப்பைப் புறக்கணித்துள்ளன. “இந்தத் தீர்மானம் ஆக்கிரமிப்பு செய்யும் ஆதிக்க நாடுகளுக்கு   வழங்கப்பட்ட ‘ஆசிர்வாதமாக’ தெரிகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெச்சரிக்கை கூட விடாமல் போரைத் தொடங்கினார்கள் என்ற குற்றத்தை இந்தத் தீர்மானம் மறைக்கிறது” என ரஷ்ய தூதர் வாசிலி நெபென்சியா தெரிவித்துள்ளார். “இந்த போருக்கு எந்த சட்டப்பூர்வ அடிப்படையுமில்லை. அமெரிக்காவும் இஸ்ரேலும் தான் முதலில் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்” என்று சீன தூதர் ஜாங் ஜுன் கூறியுள்ளார்.