ஜனநாயகத்தின் சோதனைக் களம் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெளிப்படுத்தும் உண்மைகள்
புதுதில்லி இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் 39 ஆண்டுகளுக்குப் பிறகு, மக்களவை சபாநாயகரின் நடுநிலைமையை எதிர்க்கட்சிகள் முறையாகக் கேள்விக்குட் படுத்தியுள்ளன. 2026ஆம் ஆண்டு மார்ச் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், ஓம் பிர்லாவுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம், ஆளும் தரப்பின் அணுகுமுறை மற்றும் நாடாளுமன்றத்தின் தற்போதைய நெருக்கடியை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. சபாநாயகர் பதவி என்பது அரசியல மைப்புச் சட்டத்தின்படி நடுநிலையானது.
ஆனால், அது ஆளும் கட்சியின் மேலாதிக் கத்தை நிலைநாட்டும் ஒரு கருவியாக மாற்றப் பட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. 118 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப் பமிட்ட இந்தத் தீர்மானம், 13 மணி நேரத்திற்கும் மேலாக விவாதிக்கப்பட்டது. இறுதியில், வாக்கெடுப்பு பதிவு செய்யப்படாமலும், தீர்மானத்தைக் கொண்டு வந்தவருக்கு இறுதி உரையாற்ற வாய்ப்பளிக்கப்படாமலும், அம ளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது. எண்களின் அடிப்படை யில் இத்தீர்மானம் தோல்வியடைந்தது எதிர் பார்த்த ஒன்றுதான் என்றாலும், பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நாடாளுமன்ற ஜனநாயகம் முறை யாகச் சிதைக்கப்படுவதை இந்த விவாதம் ஆவணப்படுத்தியுள்ளது. தீர்மானத்தின் பின்னணி 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடை பெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட நிகழ்வுகளே இந்தத் தீர்மானத்திற்கு உடனடித் தூண்டுதலாக அமைந்தன. பிப்., 2 அன்று, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனேவின் வெளியிடப்படாத நினை வுக் குறிப்புகளின் சில பகுதிகளை மேற்கோள் காட்ட முயன்றார்.
அதாவது 2020ஆம் ஆண்டு சீனாவுடனான எல்லை நெருக்கடியின் போது ராணுவ முடிவுகளில் அரசியல் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் ‘தி கேரவன்’ (The Caravan) இதழில் வெளியான செய்திகளை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், சபாநாய கர் ஓம் பிர்லா விதி 349 மற்றும் 353-ஐப் பயன் படுத்தி, ராகுல் காந்தி அந்தத் தரவுகளைக் குறிப்பிடத் தடை விதித்தார். வெளியிடப் பட்ட செய்திகளை மேற்கோள் காட்ட நாடாளு மன்ற நடைமுறையில் அனுமதி இருந்தபோதி லும், ராகுல் காந்தியின் உரையின் போது ஆளும் கட்சியினரும் சபாநாயகரும் 20 முறை குறுக்கிட்டனர். இரட்டை நிலைப்பாடு இதற்கு நேர்மாறாக, இரண்டு நாட்களுக் குப் பிறகு பாஜக எம்.பி., நிஷிகாந்த் துபே, காந்தி குடும்பத்தினர் மீது தனிப்பட்ட தாக்கு தல்களைத் தொடுக்கும் புத்தகங்களைச் சபை க்குக் கொண்டு வந்தார். அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த பாஜக கூட்டணியின் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., கிருஷ்ண பிரசாத் தென்னெட்டி, விதி 349-ஐச் சுட்டிக் காட்டி அவரைத் தடுக்க முயன்றார். ஆனால், நிஷிகாந்த் துபே எந்தத் தடையுமின்றி மூன்று நிமிடங்கள் தொடர்ந்து பேசினார். எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒரு நீதி, ஆளும் கட்சி உறுப்பினருக்கு ஒரு நீதி என்ற இந்த இரட்டை நிலைப்பாடு சபையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமர் இல்லாமல் நாடாளுமன்றச் சிதைவு இத்துடன் நிற்க வில்லை. பிப்., 3 அன்று 8 எதிர்க்கட்சி எம்.பி., க்கள் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பிப்., 5 அன்று, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரைக்கு பிரதமர் மோடி வர வேண்டாம் எனத் தான் அறிவுறுத்தியதாக ஓம் பிர்லா அறிவித்தார்.
பெண் காங்கிரஸ் எம்.பி.,க்கள் அசம்பாவிதங்களை ஏற்படுத் தக் கூடும் என்ற உளவுத்துறை தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதா கக் கூறப்பட்டது. ஆனால், பின்னர் வெளியான நாடாளுமன்றத் தொலைக்காட்சி காட்சிகளில் எம்.பி.,க்கள் அமைதியாகப் பேசுவதும் பதாகைகளை ஏந்தி நிற்பதுமே பதிவாகி யிருந்தது. இறுதியில், 2004-க்குப் பிறகு முதன் முறையாகப் பிரதமரின் பதிலுரை இல்லா மலும், எதிர்க்கட்சித் தலைவருக்குப் பேச வாய்ப்பளிக்கப்படாமலும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சூழலில் பிப்., 10 அன்று காங்கிரஸ் எம்.பி., முகமது ஜாவேத், கே. சுரேஷ் மற்றும் மல்லு ரவி ஆகியோருடன் இணைந்து சபாநாயகரை நீக்கும் தீர்மானத்தை வழங்கி னார். சபாநாயகர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுபவதாகவும், எதிர்க்கட்சித் தலை வர்களின் பேச்சுரிமையைப் பறிப்பதாகவும், ஆளும் கட்சியின் நிலைப்பாட்டைத் தொ டர்ந்து ஆதரிப்பதாகவும் அந்தப் புகார் மனுவில் குற்றம் சாட்டப்பட்டது.
சபாநாயகர் தனது நடுநிலைமையை இழந்துவிட்டதால், அவையின் அனைத்து தரப்பினரின் நம்பிக் கையையும் அவர் இழந்துவிட்டதாக அந்த மனு குறிப்பிட்டது. ஆளும் தரப்பின் திசைதிருப்பல்; தாக்குதல் 2 நாட்கள் நடைபெற்ற விவாதத்தில் ஆளும் பாஜக சபாநாயகரின் செயல்பாடு களை நியாயப்படுத்துவதை விட, ராகுல் காந்தி யைத் தாக்குவதிலேயே அதிக கவனம் செலுத்தி யது.நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண்ரிஜிஜு, ராகுல் காந்திக்குப் பதிலாகப் பிரி யங்கா காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கலாம் எனக் கூறி விவாதத்தைத் திசைதிருப்பினார். பாஜக எம்.பி., அனுராக் தாக்கூர், ராகுல் காந்தியை “வதந்திகளின் தலைவர்” என்று சாடியதோடு, ஜார்ஜ் சோரோ ஸின் (ஹங்கேரிய-அமெரிக்கப் பெரும் முதலீட்டாளர்) திட்டப்படி இந்த அவை நடக்காது என்றும் பேசினார். ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் எதிர்க்கட்சிகளின் வாதங்க ளை “அடிப்படையற்றவை” என்றும், ஒரு தனி நபரின் ஈகோவைப் பூர்த்தி செய்யவே இத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாகவும் கூறினர். அமித் ஷா உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நிறைவுரை இதில் மிக முக்கியமானதாக அமைந்தது.
ராகுல் காந்தியின் 17ஆவது லோக்சபா வருகைப் பதிவு (51%), அவரது வெளிநாட்டுப் பயணங்கள், பிரதமரைக் கட்டிப்பிடித்தது, கண்ணடித்தது போன்ற பழைய விவகாரங்களைப் பேசியே அவர் நேரத்தைச் செலவிட்டார். “இது சபாநாயக ருக்கு எதிரான தீர்மானமா அல்லது எதிர்க் கட்சித் தலைவருக்கு எதிரானதா?” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணு கோபால் கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஆக்கப்பூர்வமான புகார்களான - விதிமுறைகளை ஒருதலைப்பட்சமாகப் பயன்படுத்துவது, ஒட்டுமொத்தமாக எம்.பி.,க்களை சஸ்பெண்ட் செய்வது, துணைச் சபாநாயகர் பதவியை நீண்டகாலமாகக் காலியாக வைத்திருப்பது போன்றவற்றுக்கு அமித் ஷா நேரடியாகப் பதிலளிக்காமல் மழுப்பினார். மேலும், தீர்மான விவாதத்துக்கு முன்பு ஓம் பிர்லாவால் நியமிக்கப்பட்ட பாஜக எம்.பி., ஜகதாம்பிகா பால் இந்த விவாதத்திற்குத் தலைமை தாங்கியது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி சுட்டிக்காட்டி னார். இதற்கு முன் சபாநாயகருக்கு எதிரா கத் தீர்மானம் வந்த மூன்று முறையும் துணைச் சபாநாயகர்களே தலைமை தாங்கி னர்.
ஆனால், கடந்த 7 ஆண்டுகளாகத் துணைச் சபாநாயகர் பதவி நிரப்பப்படாமல் இருப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் 93ஆவது பிரிவை மீறும் செயலாகும். எதிர்க்கட்சிகளின் வலுவான வாதங்கள் விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய காங்கிரஸின் கவுரவ் கோகோய், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் “அரசியல மைப்பு ஒழுக்கம் என்பது நடுநிலைமையைக் கோருகிறது” என்ற வரிகளை நினைவூட்டி னார். சபாநாயகர் என்பவர் நாட்டின் சுதந்தி ரம் மற்றும் கண்ணியத்தின் சின்னம் என்று ஜவஹர்லால் நேரு கூறியதை அவர் சுட்டிக் காட்டினார். சீனா எல்லை விவகாரம் முதல் எப்ஸ்டீன் கோப்புகள் வரை எதைப் பற்றிப் பேசவும் எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுமதி மறுக்கப்படுவதை அவர் ஆவணப் படுத்தினார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தனது உரையில், 2004 முதல் இதுவரை 245 எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ளனர், அதில் 120 பேர் ஓம் பிர்லாவின் பதவிக்காலத்திலேயே நீக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 2023 டிசம்ப ரில் ஒரே நேரத்தில் 100 எம்.பி.,க்கள் சஸ் பெண்ட் செய்யப்பட்டது ஜனநாயகத்தின் கறுப்புப் பக்கம். பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி சபைக்கே உரிய கண்ணியமின்றிப் பேசிய போது நடவடிக்கை எடுக்காத சபாநாயகர், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதில் மட்டும் தீவிரமாக இருக்கிறது. “இறைவனின் பெய ரால் சொல்கிறேன், நீங்கள் இங்கிருந்து வெளி யேறுங்கள்” என்ற புகழ்பெற்ற வாசகத்துடன் அவர் தனது உரையை நிறைவு செய்தார். காங்கிரஸ் எம்.பி., மணீஷ் திவாரி பேசுகை யில்,“ஆளும் கட்சி தனது வழியில் செயல் படலாம், ஆனால் எதிர்க்கட்சிகள் தனது கருத்தைச் சொல்ல அனுமதிக்கப்பட வேண்டும்” என்றார்.
யுபிஏ ஆட்சிக்காலத்தில் ஒருபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக இடைநீக்கம் செய்யும் தீர்மானங்கள் கொண்டு வரப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். திமுக தலைவர் டி.ஆர். பாலு, ஓம் பிர்லா ஒரு மென்மையான மனிதர் என்றாலும், அவர் எடுத்த நடவடிக்கைகள் கடுமையானவை என்று வருத்தத்துடன் தெரிவித்தார். சிவ சேனா (உத்தவ்) எம்.பி. அரவிந்த் சாவந்த், இவ்வளவு முக்கியமான விவாதத்தின் போது பிரதமர் மோடி அவைக்கு வராததைக் கண்டித்தார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறுக்கிட்டுப் பேசுகையில்,”நான் பல முறை தடுக்கப்பட்டேன். பிரதமர் சமரசம் செய்துகொண்ட விவகாரம், நரவனே விவகாரம், எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து நான் பேச முயன்றபோது என் குரல் ஒடுக்கப் பட்டது. நம் பிரதமர் சமரசம் செய்து கொண் டார் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று மீண்டும் அழுத்தமாகக் கூறினார். தீர்மானம் முடிவுக்கு வந்த விதம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 293 ஆகவும், ‘இந்தியா’ கூட்டணியின் பலம் 234 ஆகவும் இருந்ததால், தீர்மானம் தோற்கும் என்பது முன்பே தெரிந்ததே. ஆனால், அது தோற்கடிக்கப்பட்ட முறைதான் கவலை யளிக்கிறது.
அமித் ஷாவின் உரையைத் தொடர்ந்து, தீர்மானத்தைக் கொண்டு வந்த முகமது ஜாவேத் விளக்கம் அளிக்க முற்பட்டார். ஆனால், அவை தலைமை வகித்த ஜகதாம்பிகா பால் அதற்கு அனுமதிக்க வில்லை. அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவிய நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதாக அறி விக்கப்பட்டது. ஒரு முறையான வாக்கெடுப்பு (Division) கூட நடத்தப்படவில்லை. இந்திய ஜனநாயகத்திற்கு இது உணர்த்தும் செய்தி இந்தத் தீர்மானம் வெற்றி பெறாது என்று எதிர்க்கட்சிகள் அறிந்தே இருந்தன. ஆனால், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகை யில், சபாநாயகரின் நடுநிலைமைச் சிதைவை நாடாளுமன்றப் பதிவேட்டில் முறைப்படி கொண்டு வருவதுதான் அவர்களின் நோக்க மாக இருந்தது. விதிமுறைகளை ஒருதலைப் பட்சமாக அமல்படுத்துவது, எதிர்க்கட்சிக ளை குறிவைத்து இடைநீக்கம் செய்வது, துணைச் சபாநாயகர் பதவியை ஏழு ஆண்டு களாக நிரப்பாமல் வைத்திருப்பது போன்ற வை இப்போது 18ஆவது மக்களவையின் நிரந்தரப் பதிவாகிவிட்டன. துணைச் சபாநாயகர் பதவி என்பது சடங்கு ரீதியானது அல்ல. அது எதிர்க்கட்சிக ளுக்கு வழங்கப்படும் அங்கீகாரம்.
ஏழு ஆண்டுகளாக அந்தப் பதவியை நிரப்பாமல் இருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விடப்பட்ட சவால். சபாநாயகரின் நடு நிலைமை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால், பதிலுக்கு எதிர்க்கட்சித் தலை வரைத் தனிப்பட்ட முறையில் தாக்கும் ஆளும் கட்சியின் போக்கு, இந்தியாவின் ஜன நாயகக் கலாச்சாரம் எத்தகைய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. எண்களின் அடிப்படையில் எதிர்க்கட்சி கள் தோற்றிருக்கலாம். ஆனால், நாடாளு மன்றம் என்ற நிறுவனத்தின் சிதைவை நாட்டு மக்களுக்கு உணர்த்திய வகையில் அவர்கள் தார்மீக வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்த விவாதத்தின் போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும், ஆளும் தரப்பு நடந்து கொண்ட முறையும் இந்திய வரலாற்றில் நீங்காத கறையாக நிலைத்திருக்கும்.
