tamilnadu

விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொலை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

விளாத்திகுளம் அருகே  பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொலை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

சென்னை, மார்ச் 12 - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர்  பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், இதுதொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. இந்தக் கொடூரமான படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. புகாரை வாங்க மறுத்து போலீசார் அலட்சியம் விவசாயி மகளான மாணவி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். மார்ச் 10 அன்று, வீட்டிலிருந்து உடல் உபாதை கழிப்பதற்கு காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் தேடியும் மாணவி கிடைக்கவில்லை.  இதனால், குளத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். ஆனால், புகாரை வாங்க மறுத்த காவல்துறையினர், மகளிர் காவல்  நிலையம் செல்லுங்கள் என்று அலைக் கழித்துள்ளனர். காட்டுப் பகுதியில் கிடந்த மாணவியின் உடல் இந்நிலையில் உறவினர்கள் காட்டுப் பகுதியில் தேடிய போது முகம் மற்றும் உடலில் காயங்களுடன் மாணவி சடல மாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்த னர். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வியில் சாதிக்க வேண்டு மென்று துடித்த மாணவி பாலியல் வன்கொடு மைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது அக்குடும்பத்தின ருடைய கனவையே சிதைத்துள்ளது. காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் ஒருவேளை இக்கொடுமை தடுக்கப்பட்டிருக்கலாம் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவே, இந்த பாலியல் வன்கொடுமைப் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து போக்சோ சட்டத்தின் படி உரிய  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மெனவும், அலட்சியமாக நடந்து கொண்ட  காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், படுகொலை செய்யப் பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேலும், இதுபோன்ற குற்றங்கள் இனி நடைபெறாமல் இருப்பதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.  இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.