“குளியலறைக்குச் செல்லக் கூட அமெரிக்காவின் அனுமதி தேவையா?”
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது படை யெடுத்தபோது இந்தியாவின் மௌனத்தையும் மென்மையான அணுகுமுறையையும் “முது கெலும்பற்றது மற்றும் கோழைத் தனமானது” என எழுத்தாளர் அருந்ததி ராய் குற்றம் சாட்டி யுள்ளார். தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் அவர் மேலும் பேசுகையில்,”நாம் ஒரு காலத்தில் ஏழைகளின் நாடாக இருந்த போதிலும், நமக்கு சுயமரியாதை மற்றும் கண்ணியம் இருந்தது. ஆனால் இன்று, இந்தியா ஒரு பணக்கார நாடாக மாறிவிட்டது. ஆனால் பெரும்பாலான மக்கள் ஏழைகளாகவும் வேலையில்லாதவர்களாகவும் உள்ளனர். உணவுக்கு பதிலாக, அவர்களுக்கு வெறுப்பும் பொய்களும் வழங்கப்படுகின்றன. நமது துணிச்சலும் பெருமையும் இப்போது திரைப்படங்களில் மட்டுமே. மற்ற நாடுகளின் தலைவர்களைக் கடத்தி படுகொலை செய்யும் போது அமெரிக்காவிற்கு எதிராக குரல் எழுப்ப முடியாத அளவுக்கு இந்திய அரசு (ஒன்றிய மோடி அரசு) மிகவும் கோழைத்தனமாக மாறியுள்ளது. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு கூட அமெ ரிக்காவின் ‘அனுமதிக்காக’ காத்திருக்கும் நிலையில் உள்ளது. “எங்கள் அம்மாவைப் பார்க்கவும், குளியல றைக்குச் செல்லவும் இப்போது எங்களுக்கு அமெரிக்கா வின் அனுமதி தேவையா?” என்று எழுத்தாளர் அருந்ததி ராய் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
