மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் கே.ராதாகிருஷ்ணன்
நாட்டின் 140 கோடி மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும். ஆனால், மக்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனை களான வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு மற்றும் எல்லைப் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் பேச முற்படும்போதெல்லாம், சபாநாயகரின் குறுக்கீடுகளால் அந்த குரல்கள் நசுக்கப்படுகின்றன. சபாநாயகரின் இந்த இரட்டை நிலைப்பாடு அவையின் நடுநிலைமையை முழுமையாகக் கேள்விக்குள்ளாக்கிவிட்டது. முக்கியமான சட்ட முன்வடிவுகள் எந்தவித விவாதமும் இன்றி, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் நிறைவேற்றப்படு வதற்குச் சபாநாயகர் துணை போவது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல. சபாநாயகர் பதவி என்பது ஆளும் கட்சியின் நீட்சியாக இருக்கக்கூடாது, மாறாக அது ஜனநாயகத்தின் பாதுகாவலனாக இருக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன்
நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது எண்களின் விளையாட்டு மட்டுமல்ல, அது சிறுபான்மைக் கருத்துகளுக்கும் உரிய மதிப்பளிக்கும் பண்பு சார்ந்தது. சபாநாயகர் தனது நடுநிலைமை யைக் கைவிடும்போது, அது நாட்டின் பன்முகத்தன்மையின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகிறது. பாஜகவின் கொள்கை களைத் திணிக்கும் ஒரு மேடையாக இந்தச் சபை மாற்றப் படுவதைச் சபாநாயகர் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டார்.
சிவசேனா (உத்தவ்) எம்.பி., சஞ்சய் ராவத்
கேரளம், தமிழ்நாடு என மாறிமாறி பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாட்டில் என்ன நிலைமை என்றே அவருக்கு புரியவில்லை. மேற்கு ஆசிய மோதலின் தாக்கம் இந்தியாவின் எரிசக்தி குறித்து அவர் விவாதிக்கவில்லை.
