tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

விளாத்திகுளம்  காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

தூத்துக்குடி, மார்ச் 12 - 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொலை வழக்கில், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீணா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், மாணவி வன்கொலைக்குக் காரணமான குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், சிசிடிவி காட்சிகள் மற்றும் பல்வேறு தொழில்நுட்பரீதியில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளதாகவும் நெல்லை சரக டி.ஐ.ஜி சரவணன் தெரிவித்துள்ளார். இதனிடையே, வேடநத்தம் கிராமத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன், வீடு, வீடாக சென்று விசாரணை நடத்தினார்.

டி.ஜி.பி. நியமனம்  அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு

புதுதில்லி, மார்ச் 12 - தமிழ்நாட்டில் டி.ஜி.பி.  நியமனம் தொடர்பாக தலைமைச் செயலாளர் மீது தொடரப்பட்டிருந்த நீதி மன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. தகுதி யுள்ள அதிகாரிகளின் பட்டியல் ஏற்கெனவே யுபிஎஸ்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தாக தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல தமிழக அர சின் பட்டியலை ஆய்வு செய்ய மார்ச் 20 அன்று தேர்வுக்குழு கூட்டம் நடை பெற உள்ளதாக யுபிஎஸ்சி தெரிவித்தது. இந்த விளக்க ங்களை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

பெட்ரோல்-டீசல்  தட்டுப்பாடா? ஐஓசி விளக்கம்

சென்னை, மார்ச் 12 - நாடு முழுவதும் இந்தி யன் ஆயில் நிறுவனத்தால் இயக்கப்படும் அனைத்து எரிபொருள் நிலையங்களும் வழக்கம்போல் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக இந்திய எண்ணெய் கழகம் (IOC) தெரிவித்துள்ளது. பெட் ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவில் கை யிருப்பில் உள்ளன என்றும், விநியோக நடவடிக்கை களும் நாடு முழுவதும் சீராக நடைபெற்று வருவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.