tamilnadu

img

பென்சன் சட்ட திருத்தம் 2025 – திரும்பப்பெறுக

பென்சன் சட்ட திருத்தம் 2025 – திரும்பப்பெறுக

கோவை, ஜன.12- பென்சன் சட்ட திருத்தம் 2025 –  திரும்ப பெறக்கோரி சிவானந்த  காலனியில் மத்திய, மாநில அரசு ஓய் வூதியர்கள் தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டனர். பென்சன் சட்ட திருத்தம் 2025-  திரும்பப் பெற வேண்டும். 8 அவது  ஊதியக்குழு பரிந்துரை வரம்பில் ஓய்வூதிய மாற்றத்தை சேர்த்திட வேண்டும். புதிய தொழிலாளர் சட்ட  திருத்தத்தை திரும்பப் பெற வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கோவை சிவானந்த காலனி யில் திங்களன்று ஒன்றிய, மாநில அரசு  ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர். சிவில் போர்ம் ஆப்  பென்ஷனர்ஸ் அசோசியேசன் சார் பில் ஒருங்கிணைப்பாளர்கள் என்.அரங்கநாதன், எம்.தனுஷ்கோடி. ஏ. குடியரசு, டி.சுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி வாழ்த்திப் பேசினார். சிவில் போர்ம் ஆப் பென்ஷனர்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் டிஎஸ். வெங்கடாசலம், சுப்புராயன், கே.அருணகிரி, டி.எஸ். வெங்கட்ராமன் எஸ்.என்.மாணிக் கம், வி.வெங்கட்ராமன், அருணகிரி,  சி.வி மீனாட்சி சுந்தரம், நாதன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.