திருத்தணி பிடிஒ சந்தானம் காலமானார்
திருவள்ளூர், ஜன.12- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவரும், திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த அ.சந்தானம் (வயது 58), மாரடைப்பால் ஞாயிறன்று (ஜன 11), திருத்தணியில் காலமானார். ஊரக வளர்ச்சிததுறை அலுவலர்களின் கோரிக்கைகளுக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு முன்னணி தலைவராக இருந்து பணியாற்றி வர். எதிர்பாராதவிதமாக மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. அவரின் உடல் திருத்தணி அரசு மருத்துவமனையில் ஞாயிறன்று மாலை வைக்கப்பட்டிருந்தது. அப்போது அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை யில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அ.சந்தானம் உடலுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் சி.காந்திமதிநாதன், மாநில பொதுச் செயலாளர் க.பிரபு, மாவட்ட தலைவர் வீரமணி, மாவட்ட செயலாளர் ஸ்ரீராம்காந்தி. பொருளாளர் மகேந்திரன், துணைத்தலைவர் கௌ.மில்கிராஜாசிங், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஏ.மணிகண்டன், திருத்தணி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், திட்ட இயக்குநர் ஜெயகுமார், ஓய்வூதிய சங்கத்தின் நிர்வாகிகள் து.மகேந்திரன், கோ.இளங்கோவன், ஆர்.ஜெயராமன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி சிபிஎம் மாநில குழு உறுப்பினர் ஐ.ஆறுமுக நயினார், மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், மூத்த தோழர் கே.செல்வராஜ், திருவள்ளூர் நகர செயலாளர் உதயநிலா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அவ ரின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார். மறைந்த சந்தானத்திற்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். திங்களன்று (ஜன12) சென்னையில் சந்தானத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.
