தில்லி சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதல்முறையாக தமிழ்நாடு
அரங்கு தில்லியில் உள்ள பாரத் மண்ட பத்தில் உள்ள பிரகதி மைதா னத்தில் ஜனவரி 10ஆம் தேதி தில்லி சர்வதேச புத்தகக் கண்காட்சி தொடங்கியது. ஜனவரி 18ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் முதல்முறையாக தமிழ்நாடு அரங்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் மூலம் வெளியிடப்பட்ட தரமான நூல்கள், மொழிபெயர்ப்புப் படைப்புகள், தமிழ கத்தின் தொன்மையை விளக்கும் கீழடி உள்ளிட்ட அகழாய்வு முடிவுகள் மற்றும் அது சார்ந்த ஆவணப் படங்கள், புத்த கங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள் ளன. தில்லியில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் அங்கு செல்லும் தமிழ் ஆர்வலர்க ளுக்கு, தாய்மொழியின் பெருமையை ஒரு உலகளாவிய தளத்தில் காண்ப தற்கு தில்லி சர்வதேச புத்தகக் கண் காட்சியின் தமிழ்நாடு அரங்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
