இபிஎப்ஓ ஊதிய வரம்பு உயர்வு 4 மாதத்திற்குள் முடிவெடுக்க உச்சநீதிமன்றம்
அறிவுறுத்தல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) திட்டத்தின் கீழ் பலன்பெறு வதற்கான ஊதிய உச்ச வரம்பை உயர்த்துவது குறித்து 4 மாதங்களுக்கு முடிவெடுக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊதிய உச்ச வரம்பு கடந்த 11 ஆண்டு களாக உயா்த்தப்படாததையும் உச்சநீதி மன்றம் சுட்டிக்காட்டியது. ஒன்றிய, மாநில அரசுகள் அறிவிக்கை செய்யும் நலத் திட்டங்களுக்கான ஊதிய உச்சவரம்பு இதைவிட அதிகமாக நிர்ண யிக்கப்படுகின்றபோதிலும், இபிஎஃப்ஓ-வுக்கான ஊதிய உச்ச வரம்பு மட்டும் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. இத னால், பெரும்பான்மை தொழிலாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.