மாதவிடாய் சுகாதாரம் அடிப்படை உரிமை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
புதுதில்லி பள்ளிகளில் மாதவிடாய் சுகா தாரம் மற்றும் கழிப்பறை வசதிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வெள்ளியன்று நீதிபதி கள் ஜே.பி.பார்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பான மனுவில், “பள்ளிகளில் பயிலும் வளரிளம் பெண்களுக்குத் தேவையான சானிட்டரி நாப்கின்கள் மற்றும் முறையான கழிப்பறை வசதிகள் இல்லாததால், அவர்கள் கல்வியில் பின்தங்குவதையும், பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தும் பிரச்சனைகள் தீவிரமாக அதிக ரித்து வருகின்றன” என அதில் கூறப்பட்டுள்ளது. மனுதாரர் மற்றும் அரசு தரப்பு வாதத்திற்கு பின்பு உச்சநீதிமன்ற நீதிபதிகள்,“மாதவிடாய் காலத்தில் ஒரு பெண்ணின் உடல் நலம் மற்றும் சுகாதாரம் பேணப் படுவது, அவர் கண்ணியத்துடன் வாழ்வதற்கு மிக அவசியமானது ஆகும். அதாவது இந்திய அரசி யலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21இன் (வாழ்வுரிமை) கீழ், ‘மாத விடாய் சுகாதாரத்திற்கான உரிமை’ ஒரு அடிப்படை உரிமை யாக உள்ளது. அதனால் நாடு முழுவதும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மட்கும் தன்மை யுடைய சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்க வேண்டும். இது வெறும் சலுகை அல்ல, அது ஒரு அடிப்படை உரிமை. அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளும் இந்த வசதிகளைச் செய்து தர வேண்டும். இதில் தவறும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். அதே போல அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக் கெனத் தனி கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி கள், தண்ணீர் மற்றும் சோப்பு வசதி இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். பயன் படுத்தப்பட்ட நாப்கின்களைச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் அப்புறப்படுத்தச் சிறப்பு எரிப்பான்கள் அமைக்கப் பட வேண்டும். ஒரு பெண் குழந்தை தனது மாத விடாய் சுழற்சிகாரணமாகப் பள்ளிக்கு வரத் தயங்குவது அல்லது கல்வியைத் தொடர முடியாமல் போவது என்பது அவரது சமத்துவ உரிமையைப் (பிரிவு 14) பாதிக்கும் செயலாகும். இது சமூகத்தின் கூட்டுத் தோல்வியாகும். அதனால் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ஒரே மாதிரியான ‘மாதவிடாய் சுகாதாரக் கொள்கை’ (National Menstrual Hygiene Policy) அமல்படுத்தப்படும்” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் ஆர்.மகா தேவன் உத்தரவிட்டனர். வரவேற்பு உச்சநீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இந்தத் தீர்ப்பு, கிரா மப்புற மற்றும் பின்தங்கிய நிலை யில் உள்ள கோடிக்கணக்கான மாணவிகளின் கல்வி மற்றும் சுகாதாரத்தில் மிகப்பெரிய மாற் றத்தை ஏற்படுத்தும் என எதிர் பார்க்கப்படுகிறது.
