states

img

உத்தரகண்டில் இந்துத்துவா குண்டர்கள் மீண்டும் அட்டூழியம் புலம்பெயர்ந்த காஷ்மீர் தொழிலாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்

உத்தரகண்டில் இந்துத்துவா குண்டர்கள் மீண்டும் அட்டூழியம் புலம்பெயர்ந்த காஷ்மீர் தொழிலாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்

டேராடூன் ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த டேனிஷ் கானாய், அவரது தம்பி தாபிஷ் ரஷீத் ஆகிய இரு வரும், பாஜக ஆளும் உத்தர கண்டில் சால்வை வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில், சகோதரர்கள் இருவரும் கடந்த புதனன்று மாலை இமாச்சலப் பிரதேசத்தின் போண்டா சாஹேப் பகுதியில் வியாபாரத்தை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, விகாஸ் நகர் அருகே உள்ள ஒரு கடையில் தேநீர் அருந்த நின்ற னர். இருவரும் தங்களுக்குள் காஷ்மீரி மொழியில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த கடைக்காரரும், அவரது நண்பரும், “இது உத்தரகண்ட், காஷ்மீர் அல்ல” என்று கூறி சகோதரர்க ளை வெளியேறுமாறு மிரட்டியுள்ள னர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த சால்வை மூட்டையை பறித்துச் சாலையில் வீசியுள்ள னர். இதனை தட்டிக்கேட்ட சகோத ரர்களை கடைக்காரரும், அவரது நண்பரும் இரும்புக் கம்பியால் சர மாரியாகத் தாக்கியுள்ளனர். படுகாயம் உள்ளூர் இந்து மக்களே சகோ தரர்களை காப்பாற்றியதாகவும், ஒரு பெண்மணி இவர்களுக்கு ஆதரவாக சாட்சி சொல்ல முன் வந்ததால், விகாஸ் நகர் காவல் துறை பிஎன்எஸ் பிரிவுகள் 117 (2) மற்றும் 352இன் கீழ் வழக்கு மட்டுமே பதிவு செய்துள்ளது. இந்துத்துவா குண்டர்களை கைது செய்யவில்லை. இந்த தாக்குத லில் தாபிஷ் ரஷீத் பலத்த காயத்து டன் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலையில் 10 தையல்கள் போடப் பட்டுள்ளன. கையில் எலும்பும் முறிவு ஏற்பட்டுள்ளது. டேனிஷ் கானாய் காலில் லேசான காயங்க ளுடன் தப்பினார். புகாரை வாபஸ் வாங்க மிரட்டல் தாக்குதலுக்கு உள்ளான ரஷீத் “தி வயர்” செய்தியாளரிடம் கூறு கையில், “தாக்குதலின் போது, இவர்கள் முஸ்லிம்கள். முதலில் ஒருவனை முடிப்போம், மற்ற வனை பிறகு பார்த்துக்கொள்ள லாம் என்று கடைக்காரர் கூறினார். புகாரை வாபஸ் பெறுமாறு தங்க ளுக்கு மிரட்டல் வருகின்றன. இன்று எங்களை அடித்துவிட்டார்கள், நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளை வேறொருவருக்கு இது நடக்கும். காஷ்மீரிகள் அடி வாங்கு வதற்காகவே பிறந்தார்களா?” என்று வேதனையுடன் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம், இதே உத்தரகண்டில் திரிபுரா மாநி லத்தைச் சேர்ந்த மாணவர் சீனா வைச் சேர்ந்தவர் எனக் கூறி இந்துத் துவா குண்டர்களால் கொல்லப் பட்டார். தற்போது காஷ்மீரிகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதே போன்று பாஜக ஆளும் மாநிலங்களில் தொ டர்ச்சியாக சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால், அம்மாநிலங்களில் பணிபுரியும் புலம்பெயர் தொழி லாளர்கள் அச்சத்தில் உறைந்துள் ளனர்.

இந்துத்துவா குண்டர்களின் முதல் வேலை திருட்டுதான் மோடி

பிரதமர் ஆன பின்பு பசு பாதுகாப்பு, இந்துக்கள் பாதுகாப்பு என முஸ்லிம், தலித் மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான இந்துத்துவா குண்டர்களின் தாக்குதல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. ஆனால் தாக்குதலின் போது முதல் வேலையாக இந்துத்துவா குண்டர்கள் பணம் பறிப்பு உள்ளிட்ட திருட்டு வேலையில் தான் ஈடுபடுவார்கள். பணம், பொருட்களை கொடுத்தால் விட்டு விடுவார்கள். இல்லையென்றால் தாக்குதல் நடத்துவார்கள். உத்தரகண்டில் காஷ்மீர் சகோதரர்கள் மீதான தாக்குதலின் போது ரூ.21,000 ரொக்கம், பல ஆயிரம் மதிப்புள்ள 47 சால்வைகள் திருடப்பட்டதாக ரஷீத் குற்றம்சாட்டியுள்ளார்.