பிஎப் சம்பள உச்சவரம்பை ரூ.25,000 ஆக உயர்த்த திட்டம்?
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கட்டாய சம்பள உச்சவரம்பை ரூ. 15,000-லிருந்து ரூ. 25,000 ஆக உயர்த்த ஒன்றிய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதுள்ள ரூ.15,000 என்ற வரம்பு கடைசியாக 2014ஆம் ஆண்டு நிர்ண யிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் பணவீக்கம் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் கணிசமாக உயர்ந்துள்ளதால், இந்த வரம்பை உயர்த்த வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வரு கின்றன. அண்மையில் உச்சநீதிமன்றம் பிஎப் ஊதிய வரம்பை நான்கு மாதங்க ளுக்குள் மறுபரிசீலனை செய்யுமாறு தொழிலாளர் அமைச்சகத்திற்கு உத்தர விட்டுள்ளது. இதனால் பிஎப் சம்பள உச்சவரம்பின் முன்மொழிவு அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிஎப் மத்தியக் குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள தாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
