states

டிஜிசிஏ-விற்கு  தில்லி உயர்நீதிமன்றம் கெடு

டிஜிசிஏ-விற்கு  தில்லி உயர்நீதிமன்றம் கெடு

விமானிகளின் பணி நேரக் கட்டுப்பாடு மற்றும் சோர்வு மேலாண்மை (Flight Duty Time Limitation - FDTL) தொடர்பான புதிய விதிகளைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் குறித்த வழக்கு வெள்ளி யன்று தில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) சார்பில் ஆஜ ரான வழக்கறிஞர் அஞ்சனா கோசைன், “விமானிகளுக்கு வாராந்திர ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்ற விதி தவிர்க்க முடியாதது. இதில் எந்த ஒரு விமான நிறுவனத்திற்கும் விலக்கு அளிக்கப்படவில்லை. இண்டிகோ நிறு வனத்திற்குத் தற்காலிகத் தளர்வுகள் (இரவு நேரப் பணிகளுக்கு - பிப்., 10 வரை) வழங்கப்பட்டுள்ளன” என வாதிட்டார்.  விசாரணையின் போது குறுக்கிட்ட தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரதிபா எம்.சிங், அமித் சர்மா அமர்வு,”இரவு நேரப் பணிகளுக்கான தளர்வுக்கு ஒரு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாராந்திர ஓய்வு, விடுமுறை தொடர்பான விதிகளில் அளிக்கப் பட்டுள்ள தளர்வுகளுக்கு ஏன் காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை?” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து விரிவான பதிலைத் தாக்கல் செய்ய டிஜிசிஏ மற்றும் இண்டிகோ நிறுவ னத்திற்கு 2 வார கால அவகாசம் வழங்கி யுள்ளனர்.