மகா., துணை முதலமைச்சராகிறார் அஜித் பவார் மனைவி?
மகாராஷ்டிரா துணை முதல மைச்சரும், தேசியவாத காங்கி ரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் (66) புதனன்று புனே மாவட்டம் பாரமதி அருகே நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், வெள்ளியன்று அஜித் பவாரின் மறைவால் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்புவது குறித்து விவாதிக்க, தேசியவாத காங்கி ரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான பிரபுல் படேல், சுனில் தத்காரே,சாகேன் புஜ்பால் மற்றும் தனஞ்சய் முண்டே ஆகியோர் மும்பையில் உள்ள மகா ராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் இல்லத்தில் அவரைச் சந்தித்துப் பேசினர். சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில், அஜித் பவார் கவ னித்து வந்த நிதி மற்றும் கலால் துறை உள்ளிட்ட முக்கிய அமைச்ச ரவை பொறுப்புகளைத் தக்கவைத்துக் கொள்வது குறித்து விவாதிக்கப்பட்ட தாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், அஜித் பவாரின் மனைவியும் மாநிலங்களவை உறுப்பின ருமான சுநேத்ரா பவாரை அடுத்த துணை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
