லாலு பிரசாத்துக்கு மீண்டும் சம்மன்
மீண்டும் சம்மன் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி யின் மூத்த தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் நடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலை மையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது நிலமோசடி நடைபெற்றதாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, சிபிஐ-யும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து 2024 ஜூன் 7 அன்று லாலு பிரசாத் மற்றும் வழக்கில் தொடர்புடைய 77 பேர் (இதில் 30 பேர் அரசு ஊழியர்கள்) மீது சிபிஐ தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய் தது. அதே ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி அமலாக்கத்துறையும் தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கில் உண்மைத்தன்மையைக் கண்டறிய லாலு பிரசாத் உள்பட 77 பேருக்கு தில்லி நீதி மன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியுள் ளது. கூடுதலாக தேஜ் பிரதாப் (லாலு மகன்) மற்றும் ஹேமா ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.