states

img

குஜராத் நில மாபியா கும்பலுக்கு எதிராக பழங்குடி மக்கள் போராட்டம்

குஜராத் நில மாபியா கும்பலுக்கு எதிராக பழங்குடி மக்கள் போராட்டம்

ராஜஸ்தான் மாநிலம் குஜராத் எல்லைப் பகுதியான பிச்சிவடா சுற்றுவட்டாரப் பகுதியில் வாழும் பழங்குடி மக்களிடமிருந்து குஜராத் நில மாபியா கும்பல் தொடர்ச்சியாக நிலத்தை அபகரித்தும், அதே பகுதியில் உள்ள ஆற்றின் கரையோரம் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மூலம் ரிசார்ட் கட்டுவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் குஜராத் நில மாபியா கும்பலைச் சேர்ந்த அமித் பாண்டியா புனர்வாடா கிராமத்தில் உள்ள பழங்குடியினர் மீதும் தாக்குதல் நடத்தினார். இந்த அடக்குமுறையை கண்டித்து  பழங்குடியின மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள், ஆதிவாசி அமைப்புகள் பிச்சிவடா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.