districts

img

அதிக வைக்கோல் பாரம்: டிராக்டர்களால் விபத்து அபாயம்

ஒட்டன்சத்திரம், பிப்.26- ஒட்டன்சத்திரம் பகுதிகளில் சாலைகளில் அதிக வைக்கோல் பாரங்களை ஏற்றி, ஆபத்தான முறையில் செல்லும் டிராக்டர்களால் விபத்து அச்சம் உள்ளது. போலீ சார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டி கள் எதிர்பார்க்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மற்றும் சுற்றுப்புற மக்காசோளம் பயிர் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.  கால்நடை தீவனத்திற்கு வைக்கோல் தேவைப்படுவதால் வியாபாரிகள் அந்த பகுதிகளுக்கு சென்று வைக்கோல் களை வாங்கி வருகின்றனர். இதனை டிராக்டர்களில் அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்கின்றனர். 2, 3, டிராக்டர்களில் ஏற்ற வேண்டிய வைக்கோலை ஒரே டிராக்டரில் ஏற்றுகின்றனர். ஒட்டன்சத்திரம், இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம், பொருளுர் உள்ளிட்ட பல்வேறு கிரா மங்களின் வழியாக அதிக பாரம் ஏற்றிச் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள், பின்னால் வரும் வாகனங்கள்  விலகிச் செல்ல முடியாத அளவிற்கு மறைத்து செல்கி றது. மேலும் அதனைத் தொடர்ந்து இரு சக்கர வாக னங்களில் செல்பவர்களின் கண்களில் வைக்கோல் தூசி  பட்டு தடுமாறி கீழே விழுந்து சிறு காயங்களுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்றிச் செல்லும்  போது, மின்சார ஒயர்களில் உரசி அடிக்கடி தீ பற்றி எரி கிறது. சில இடங்களில் வாகனங்கள் விலகிச் செல்ல முடி யாமல் தூரத்திற்கு பின் தொடர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆபத்தான முறையில் அதிகமான வைக்கோல் பாரங்களை ஏற்றி செல்லும் டிராக்டர்களை கண்கா ணித்து ஒட்டன்சத்திரம் போக்குவரத்து போலீசார் நட வடிக்கை எடுக்க வேண்டும் என இடையக்கோட்டை பகுதி  வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.