districts

உயிர்ப் பலிவாங்க காத்திருக்கும் அரசு கட்டிடம்

இராமநாதபுரம், பிப்.25 இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டாட்சி யர் அலுவலகத்தில் செயல்படாமல் உள்ள கட்டிடத்தை அப்புறப்படுத்தாமல் இருப்பதால் இடிந்து உயிர்ப் பலி வாங்க காத்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.  உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்த கட்டி டத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.